Thursday, September 1, 2016


நான் நிஜமல்ல 2

தீயுடன் விளையாடதே
என்று ஓதப்பட்டது
நானோ தீயை தரிப்பவன்

கருணை அன்பு மாண்பு
என்று ஓதப்பட்டது
நான் மானுடனல்ல

இறைமை ஒளி உண்மை
என்று ஓதப்பட்டது
நான் இவற்றுகெல்லாம்
அப்பாற்பட்டவன்

என் மாயை
என் இருள்
உன்னை மீண்டும் மீண்டும்
என்னிடம் ஈர்க்கும் என்றால்
உன் உதிரத்தில் நனைவது
என் பேரின்பம்

முடிவெடு
என் மர்மங்களில்
உனக்கு மோட்சம் அளிக்கிறேம்

என் விசால இருவெளியில்
உன்னையும் ஒரு கிரகமாய்
ஜொலிக்க செய்கிறேன்

ஆனால் அதற்கு விலையுண்டு;
உன் ஆன்மா!