Thursday, June 9, 2016

மீண்டும் மலர்ந்த பூ

இன்று மீண்டும்
மலர்ந்திருக்கிறது உன் நினைவு
ஒவ்வொரு இதழாக
உதிரும் முன் வந்துவிடென்
மலரில்லா இந்த செடியை
யாரும் சட்டை செய்யவதில்லை
அல்லது வேரோடு பிடிங்கிக்கொண்டு
உன் வீட்டில் நட்டுவிடு

- அகிலன் லெட்சமண்

Tuesday, June 7, 2016

யோகி

ஒருத்தி
எனது அன்பை
ஒளித்துக்கொண்டாள்
இன்னொருத்தி
எனது காதலை
ஒளித்துக்கொண்டாள்
இன்னொருவளோ
எனது காமத்தை
ஒளித்துக்கொண்டாள்
ஒருவள்
என் கருணையை
ஒளித்திக்கொண்டாள்
ஒருத்தி
என்னையே
ஒளித்திவிட்டால்

'நான்'யார் என்பதே
மறந்து போனோம்
அந்த துன்பம் மறைக்க
சும்மா இருக்கும் பொருட்டு
குகைகள் எங்கும் அலைந்தேன்,
எங்கும் கார்பெரெட் சுவாமிஜிக்கள்

வேறுவழி தெரியவில்லை
யாருடைய கல்லறையயோ
தோண்டி
சுத்தம் செய்து
நான் படுத்துக்கொண்டேன்

தாமதமாக வந்த வெட்டியான்
அநாதைப் பிணமென எண்ணி
மூடி சென்றான்.

யாரும் கண்டடையும் வரையில்
நான் யோகி

- அகிலன் லெட்சமண்