Saturday, March 19, 2016

பத்ம பூஷன் விருதுக்கு தகுதயற்றவர் இளையராஜா

To

The President’s Secretariat
Rashtrapati Bhavan, New Delhi, 
India – 110 004.cc. PM Narendra Modi
South Block, Raisina Hill
New Delhi 110011
India


Date : 18 March 2016


பத பூஷன் விருதுக்கு இளையராஜா தகுதியற்றவர். 

  1. நேர்மையற்றவர்
  2. காவல்துறையையும் அரசியல் நட்புகளையும் தனது சுய விருப்பு வெறுப்புக்கு பயன்படுத்திக்கொள்பவர்
  3. சாமன்யரின் உயிருக்கும் உரிமைக்கும் மிரட்டல் விடக்கூடிய கிரிமினல். 
4.  பேராசையாலும் சுயநலத்தினாலும் என்னை மற்றுமன்றி இசைத்துறையில் பலரை ஏமாற்றியவர்.
5.  பிற இசைக்கலைஞர்களை மதிக்கதெரியாதவரும் அவர்களின் புகழில் பொறாமை கொண்டவர்.
6.  எந்த பின்புலமும் இல்லாத பிற நாட்டவரோ அல்லது இந்திய நாட்டின் பிரஜையோ வியாபரம் செய்ய தகுதியான நாடல்ல இது என்ற அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். 
7. இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடாக வெளிநாட்டு பிரஜையான எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பிரஜைகளுக்கும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியவர். 

8. இந்த கடிதம் எழுதுவதின் நோக்கம், இளையராஜாவுக்கு எதிரான வழக்கை நாங்கள் முறையாக எதிர்கொள்ளவிடாமல் எங்களுக்கு இடைஞ்சல் தருவதோடு காவல் துறையின் உதவியுடன் எங்களுக்கு தொல்லைக்கொடுப்பதோடு, எனது இந்திய பிரஜை ஊழியர்களின் உயிருக்கும் பாதுக்காப்பு வேண்டி இதை எழுதுகிறேன். 

பணம் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் இல்லாதவர்களுக்கு ஒரு நீதியும், புகழும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் அது இல்லாதவர்களுக்கு ஒரு நீதியும்  என்ற நிலை இந்தியாவில் மாறவேண்டும். சால்மான் கான், சஞ்சை தத் போன்றோர் விடுதலை செய்யப்பட்டது போல் இளையராஜா என்ற புகழின் முன் சட்டம் தலைவணங்குவது நீதியை நம்பும் எங்களுக்கு வருத்ததை உண்டு பண்ணுகிறது.

9. மூன்றாவது நிலை குடிமகன் என்னும் அங்கீகாரமான பத்ம பூஷன் என்ற விருதை பெறும் தகுதி இளையராஜா அவர்களுக்கு இல்லை.  கலை என்பது மானுடம் பேசுவது. நேர்மையான உணர்வுகளை பேசக்கூடியது. மனிதமும் நேர்மையும் இல்லாத ஒருவருக்கு அவரின் திறமையை மட்டும் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்குவது என்பது, இந்திய தேசத்திற்கும் இந்திய மக்களுக்கும் அவமானத்தைத் தேடித்தரும் ஒரு செயல்.  

மானுடம் பேசுவது, கலையில் மட்டும் காசுக்காக பேசப்படுவது அன்றி, ஒரு படைப்பாளியின் வாழ்க்கையிலும் அவை பிரதிபலிக்க வேண்டும்.  அந்த வகையில் இளையராஜா முற்றிலும் நேர்மையற்ற, காசுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு இசையமைப்பாளர். அவரின் இசை போதைக்கிணையான ஒரு பொழுதுபோக்கு அம்சமே அன்றி, அது உன்னத கலையல்ல. 

10. நான் அகிலன் லெட்சுமணன், ஒரு மலேசியன். அகி முயூசிக் மலேசியாவின் ஸ்தாபகரும், உயர் மேலாரும் ஆகும். இளையராஜா அவர்களை எனக்கு 2001 இல் இருந்து தெரியும். அவரின் ஆல்பமான குரு ரமண கீதம் எனது நிறுவனத்தின் முதல் வெளியீடாகும். இது வெளிவந்தது 2004 இல். பிறகு 2006 திருவாசகமும், 2007 ஆரம்பத்தில் மியூசிக் மெஸ்ஸையாவும், 2007 இறுதியில் அம்மா பாமாலையும் வெளியிட்டேன். இதில் குரு ரமண கீதத்திற்கும், திருவாசகத்திற்கும் ராயல்டி முறையிலும், அம்மா பாமாலைக்கு ஆயுள் காப்புரிமையும் பெறப்பட்டது. இவை எல்லாவற்றிக்கும், நான் ஏறக்குறைய இந்திய ரூபாய் 7 லட்சம் முன் பணமாக செலுத்தியிருக்கிறேன்.

11. 2007 ஆண்டு இறுதியில் அவர் மிகவும் வற்புறுத்தி அவரது 80ஆம் ஆண்டுகளின் பாடல்களையும், 90 ஆம் ஆண்டுகளின் பாடல்களையும்  ராயல்டி முறையில் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார். இதுவரை லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும் அவருக்கு ராயல்டி தரவில்லை என்று புகார் கூறினார். அதனால், அவைகளை முறையாக செய்யும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதற்கு வேறு காரணங்களும் உண்டு. அவரது பாடலை தைவானின் ஒரு சீன சினிமா படத்தில் பயன்படுத்துவதற்காக நான் லைசன்ஸ் கொடுத்து அதன் வருமானத்தில் 100% முழுவதையும் இளையராஜாவிற்கு கொடுத்தேன். அதுபோல் ஹலிவூட் பட வாய்ப்புக்காக முயற்சித்த போது அவர்கள் சாம்பிள் கேட்டதால் அவரின் இசையமைப்பில் வந்த லட்ஜா திரைப்படத்தின் 30 நிமிட பின்னனி இசையை கொடுத்தார். என்னுடைய முயற்சியையும், திறமையையும் அறிவையும், நேர்மையையும் கண்டு என்னை 80களின் மற்றும் 90களின் பாடல்களையும் வெளியிட சொன்னார்.

12. ஆனால் மூன்று வருடமாக அவரின் இசையை என்னால் மலேசியா தவிர வேறு எங்கும் விற்க முடியவில்லை. காரணம் எனக்கு கொடுத்த உரிமைகளை ஏற்கனவே பிற நிறுவனங்களுக்கும் கொடுத்து இருக்கிறார். நான் 2009 வரை வியாபரம் செய்ய முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு முறையும் சமாதனம் செய்து அனுப்பிவந்தார்.  அவரின் அனுமதியின் பேரில் பல நிறுவனங்களுக்கு வக்கில் நோட்டிஸ் அனுப்பியும், மொபைல் நிறுவனங்கள் மற்றும் வானொலி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தேன். 2009 ஆகஸ்டில் யூனிஸிஸ் என்ற கர்னாலை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தேன் காரணம் அவர்கள் இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக சமாளிக்களாம் என்றும் அதற்கான செலவுகளையும் அவர்களே கவனித்துக்கொள்வதாகவும் கூறினார்கள். அவர்கள் தந்த உத்வேகத்தின் காரணமாக அவர்களுடன் ஒப்பந்த செய்து எங்கள் வருமானத்தில், அதாவது 4.8 லட்ச ரூபாயில் ஐம்பது சதவிகிதம் இளையராஜாவிற்கும் கொடுத்தேன்.  

13. 2010 ஜனவரி 5ஆம் திகதி அவரை கொண்டு சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கை சந்திப்பு நடத்தினேன். அதில் எல்லா உரிமைகளும் அவரிடம் இருக்கிறது என்றும் அதை என் நிறுவனத்திற்கு தந்திருப்பதாகவும் கூறினார். அடுத்த நாளே நான்கு நிறுவனங்களின் வழக்கை சந்திக்க நேர்ந்தது. யூனிஸிஸ் வழக்கில் ஆர்வம் காட்டாமல் கைவிட்டதால் எல்லா வழக்குகளுக்கும் அதன் பிரதிவாதிகளான இளையராஜா, இளையராஜாவின் மனைவி மற்றும் அவர்களின் நிறுவனத்தின் சார்பாக பிரதிநிதித்த வழக்கறிஞர்களுக்கும் நானே செலவுகள் செய்யவேண்டி வந்தது. அந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட இதர செலவுகளையும் நானே செய்தேன். அது பல பல லட்சங்களை விழுங்கியது.  

வழக்குகளின் தகவல்கள் பின்வருமாறு;

  1. C S No. 187 of 2010
  2. C S No. 296 of 2010
  3. O A No. 200 of 2010
  4. O A No. 201 of 2010
  5. O A No. 338 of 2010
  6. C S No. 31 of 2010
  7. O A No. 43 of 2010


இந்த வழக்குகளில் ஒரு வழக்கில் தீர்ப்பானது, இளையராஜாவிற்கு 50 படத்திற்கான உரிமையும் இதர படங்களின் உரிமை வேறொரு நிறுவனத்திற்கும் என்றும் முடிவானது. அதுவும் நிரந்தர தீர்ப்பால்ல. உரிமை யாருக்கு என்று முடிவாக சொல்லவேண்டும் என்றால், தயாரிப்பாளர்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று முடிவானது.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  

14. அதில் திருப்தியடையாத இளையராஜா தனது அரசியல் நட்பு வட்டார பிரமுகர்களின் உதவியுடன் காவல்துறையை ஏவி அந்த நிறுவனத்தில் திடீர்சோதனை செய்ததுடன் அவரை எந்த ஆதாரங்களும் இன்றி கைது செய்தார்கள். நான் அதன் சட்டச்செயல்படு முறையைப் பற்றிக்கேட்டதற்கு, நாங்கள் இங்கு ஆதாரங்கள் இல்லாமலேயே யாரையும் கைது செய்யலாம் என்றார். அதன் பிறகு அந்த நிறுவனரை பலமுறை நான் தொடர்பு கொள்ளமுயன்றும் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை.
Criminal Original Petition 15217 of 2010

15. அதன்பிறகு நான், எங்களுக்கு தீர்ப்பளிக்கப் பட்ட படப் பாடல்களை மட்டும் யூனிஸிஸ் மூலமாக மொபைல் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தோம். யுனிஸிஸையும் இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். எந்த நிறுவனமும் செய்யத் துணியாத செயலைச் செய்தேன். எதிலும் வெளிப்படையாக இருந்தேன். காரணம் நான் அவர் பாடல்களின் தீவிர ரசிகன். அவரின் இசையை உலகின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பது எனது கடமையாக நினைத்தேன். ஆனால் அவரோ அவர்களிடமும் தனியாக வேறு ஒரு பேரம் பேசியதால், அவர்கள் எங்களின் தொடர்பை துண்டித்ததோடு, பல லட்சம் வருமானம் அவர்களிடம் இருந்து எங்களுக்கு வராமல் செய்தார். அவர்களிடம் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு கர்னாலில் வழக்குத் தொடர்ந்து அது இன்னமும் நிலுவையில் உள்ளது. 

16. இன்னொரு வழக்கில் வேறு ஒரு நிறுவனத்திடம் ஏறக்குறைய 120 படப்பாடல்களை 20 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு அதுவும் 5 வருடத்தில் காலவதியாகிவிட்டது அதோடு அவர்கள் எனக்கு எந்த தொகையும் தரவில்லை என்று கூறிதான் அதை எங்களிடம் தந்தார். அந்த வழக்கின் வாயிலாக அவர் பணத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் அது 5 வருடம்தான் செல்லும் என்றும் வாதிட்டார். ஆனால் அவர் மீதும் அவர் மனைவின் மீதும் யாரும் கிரிமினல் வழக்கு எடுக்காது இருக்கவேண்டும் என்று, அவர் சொன்ன பொய்களை ஏற்று வழக்கைத் தொடராமல் டிஜிட்டல் உரிமை எங்களுக்கு சேரவேண்டும் என்று வாதாடினோம். அந்த வழக்கும் இன்னும் நிலுவையில்.  

17. இன்னொரு நிறுவனத்திடம் எந்த ஆதாரங்களும் இளையராஜா தரப்பில் இருந்து நிரூபிக்க முடியாததால் அதில் நான் உட்பட இளையராஜாவும் தோல்வி கண்டார்.  

18. மீதம் ஒரு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. 

19. 2010 மே இல் இருந்து என் மீது வேறு நிபந்தனைகள் வைக்கத்தொடங்கினார். அதாவது வழக்குகள் முடியும்  வரை காத்திருந்து தீர்ப்புகள் வெளியானவுடன் என்னை விட்டுகொடுக்கும்படி பலமுறை வற்புறுத்தினார். ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதுவும் சரி வர நடக்கவில்லை காரணம் நிலுவையில் இருந்த வழக்குகளினால். 2011 வாக்கில் சில அரசியல் மற்றும் தொழில் பிரமுகர்களை வைத்து மிரட்டவும் செய்தார். அதான் காரணமாக 6 மாதங்கள் வரை அவருடன் பேசாமல் இருந்தேன். 

20. பிறகு அவரின் மகன் கார்த்திக் ராஜாவின் மூலம் அது தீர்வுக் காணப்பட்டது. அப்பொழுது எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்திடும் கட்டத்திற்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். ஆனால் நான் இதைவிட்டு விட வேண்டாம் என்றும் என்னைப்போன்ற நேர்மையான ஆள்தான் அவரின் பாடல்களை உலக அளவில் கொண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் 2013 ஏப்ரலில் வேறு நிறுவனத்திடம் எனக்கு தெரியப்படுத்தாமலே வேறு ஒப்பந்தம் போட்டு சிடி விநியோகமும் ஆரம்பித்தார்.  அது தெரிந்து நான் கேட்டபோது மீண்டும் விட்டுக்கொடுக்கும்படி கூறினார். ஏற்கனவே அவர் எடுத்த முடிவால்தான் நான் மீண்டும் வியாபரத்தை தொடங்கினோம். அதுவும் இந்தியாவில் நிறுவனத்தை தொடங்கி நிறைய முதலீடு செய்து சிடிகள் வெளியிட்டு இருந்தேன். அது எனது சக்திக்கு மீறிய முதலீடாக இருந்தது. அதனால் வேறு வழியின்றி அவர் மீது வழக்குத் தொடர வேண்டி வந்தது. வழக்கு எண் CS 308/2013. ஆனால் செப்டம்பர் 2014 நிழுவையில் உள்ள வழக்கை மறைத்து தடையுத்தரவு கேட்டு ஒரு சில நாட்களிலேயே தீர்ப்பும் வாங்கினார். நீதிமன்றமும் அவர் தரப்பில் எந்த ஆதாரங்களையும்  கேட்காமல் நீதி வழங்கியிருக்கிறது. இது இந்திய நீதித்துறைக்கு பெரிய அவமானமாகும்.


21. அந்த வழக்கு இன்னும் நிலுவையில், அதுவும் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நிலையில் செப்டெம்பர் 2014 இல் எங்கள் மீது முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி தடையுத்தரவு பெற்றார்.  அதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்தபோது பல்வேறு அவதூறு செய்திகளின் வாயிலாக எங்கள் மீது மற்றவர்களிடம் இருந்த நட்பெயரை கெடுத்து வந்தார். வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் போது, முன்பை போலவே தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறையினரை பயன்படுத்தி, தடையுத்தரவுக்கு பிறகு மூடியிருந்த எங்களது அலுவலகத்தை எந்த ஆவணமும் இன்றி உடைத்து உள்ளே சென்றதோடு அந்த ஏரியாவின் மற்றவியாபாரிகளையும் அதாவது ஆடியோ விற்பனையில் இல்லாத வியாபரிகளையும் மிகவும் மோசமாக நடத்தியதுடன் எங்கள் நண்பரின் வீட்டு சுவரேரி குதித்து அவமரியாதையாக நடத்தியிருக்கிறார்கள் காவல் துறையினர்.
22. அவரிடம் இருந்து நாங்கள் பெற்ற உரிமை மட்டுமின்றி வேறு சில தயாரிப்பாளர்களிடம் நாங்கள் நேரிடையாக பெற்ற உரிமைகளுக்கும் எந்த ஆதாரம் சமர்ப்பிக்காமல் தடையுத்தரவு பெற்றிருக்கிறார். நீதிமன்றமும் எந்த படம் எந்த பாடலுக்கு தடையுத்தரவு கேட்கிறார் என்று விசாரிக்காமல் தடையுத்தரவு வழங்கியிருக்கிறது. 

23. நான் டிஸ்டிரிக் கமிசனரிடம் பேசியவுடன் நரசிம்மனை மிரட்டி உங்கள் முன்பு உங்கள் அனுமதியோடுதான் உங்கள் அலுவலகத்தை திறந்தோம் என்று மிரட்டி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அச்சமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை மட்டுமல்ல ஏற்கனவே இன்னொரு நிறுவனத்தின் மேலாளரை கைது செய்ததற்கும் கூட எந்த ஆவணங்களையும் காவல்துறை இதுவரை பதிவு செய்யவில்லை.  

24. இதுவரை நான் அவருக்கு எதிராக எந்த கூற்றையும் சொல்லவில்லை காரணம் அவர் திறமையின் மீது இருந்த மரியாதையும் அன்பும். வழக்கையும் முறையாக எதிர்கொள்ள நினைக்கிறோம். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் நீதியை எதிர்கொள்கிறோம். ஆனால் அதற்கும் பல்வேறு தடங்கள் கொடுக்கிறார். 14 மார்ச் 2016 பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் எனது இந்திய பங்குதாரரை போனில் அழைத்து நீங்கள் நீதிமன்ற தடையுத்தரவை மீறி வியாபரம் செய்வதாக புகார் வந்திருப்பதாக கூறி காவல் நிலையம் வர சொல்லி மிரட்டினார். சட்டத்திற்கு விரோதமாக எல்லாம் எங்களுக்கு எதிராக நடக்கும் சூழலில் அவரை தனியே செல்லவேண்டாம் என்று கூறி வழக்கறிஞருடன் செல்ல உத்தேசித்தோம். அதற்கு எனது பங்குதாரரை அவமரியாதையாக பேசி மிரட்டியும் இருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர்.  இறுதியில் எங்கள் மீது பொய்யான புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து எங்களை விடுவித்தாலும் எங்களது வாக்கு மூலத்தையோ புகாரையோ பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

25. இவர்களின் அச்சுறுத்தலால் எனது பங்குதாரர், ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சிறிது காலம் மலேசியாவில் வந்து தங்கும்படி கூறியிருக்கிறேன்.  ஒரு பாதுகாப்பற்ற சூழலில் மன உளைச்சலுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். நானும் இவரின் பல்வேறு நெருக்கடிகளினாலும் அவரால் ஏற்பட்டப் பொருளாதர நெருக்கடிகளினாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருந்துகள் எடுத்து வருகிறேன்.  இப்படி ஒரு கிரிமினல் புத்திக் கொண்ட ஒருவருக்கு பத்ம பூஷன் விருது என்பது இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய கலங்கமும் அவமானமும் என்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். 

26. ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாகா எந்த ஆதாரங்களும் அற்று எங்கள் அலுவலகத்தை மூடியதால் இந்தியாவின் பிற இசையமைப்பாளர்களின் சிடிக்கான பணத்தையும்  வாங்க முடியாமல் விநியோகமும் செய்யமுடியாமல் இருக்கின்றோம். வேறுவழியின்றியும் இவரின் தொல்லையைத் தாங்கும் சக்தியும் பணபலமில்லாமையும் எங்களின் இந்திய அலுவலகத்தை மூடும் முடிவிற்கு வந்துள்ளோம். 

27. புகழின் உச்சியில் இருக்கும் அவர் தனது தன்மானத்தை பாதுக்காப்பதற்காகவும், பணத்தின் மீதான பேராசையினாலும் எல்லாவிதமான கீழ்தரமான செயல்களிலும் இரங்க துணிந்துவிட்டார். சட்டம் தவறுசெய்யாத எங்களை பாதுகாப்பதாக இல்லை. வழக்கும் பல வருடங்களாக நடந்துவருவதால் நாங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். வழக்கின் போக்கில் அச்சம் கொண்டு எங்களை வேறுவழிகளில் முடக்க எல்லா முயற்சிகளும் எடுக்கிறார்.

28. 2004 இல் பண்டித் ரவிசங்கருடன் ஒரு ஆல்பம் செய்ய வேண்டும் என்று பேசியபோது அவருடைய வயதுக்கு என்னுடைய இசை குறிப்புக்களை பண்டித் ரவிசங்கரால் வாசிக்க முடியுமா என்று ஏளனமாக கேட்டார். பிறகு அவரை ஒருவாராக சமாதானப்படுத்தி பண்டித் ரவிசங்கருக்கு இமெயில் அனுப்பிய போது அவரது மனைவி, இளையராஜாவின் மீது எங்களுக்கு பெரிய மரியாதை இருந்தது ஆனால் பண்டித் ரவிசங்கரின் ஒரு இசையை சலங்கை ஒலி படத்தில் எங்கள் அனுமதியில்லாம பயன்படுத்திவிட்டார். அதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை, பண்டித் ரவிசங்கரின் பெயரையும் படத்தின் டைட்டலில் இடம் பெற செய்யவும் இல்லை என்று கூறி இளையராஜாவுடன் நாங்கள் இசைதொகுப்புக்கு இணைய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதை இளையராஜாவிடம் சொன்னதற்கு, தயாரிப்பாளர் எனக்கே தெரியாமல் அதை பயன்படுத்திவிட்டார் என்று சொல்லுங்கள் என்றார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தவர், எந்த எந்த படம் அவர் இசையமைத்தது என்று கூட தெரியாத அளவு உழைத்தவர் இதை சொன்னதும் பட்டென்று பதில் சொல்கிறார் என்றால் எத்தனைப் படங்களுக்கு இப்படி அனுமதியற்ற இசைகளை உபயோகித்து இருப்பார்? 

29. ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டபொழுது அதற்கு நான்தான் காரணம் என்று என்னை சந்தேகித்து திட்டிவிட்டு ஏ ஆர் ரஹ்மானின் பாராட்டு விழாவில் அவரை புகழ்ந்து தள்ளினார். லிம்கா விருது நிகழ்வில் கூட, அவர்கள் வேண்டுமானால் ஏற்கனவே அவர்கள் முடிவெடுத்த பிற கலைஞர்களான ஜேஸுதாஸ் மற்றும் பண்டித் ஹரிபிரஸாட்க்கு கொடுக்கட்டும் நான் வரவிருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அவர்கள் விரும்பினால் பயண செலவு, தங்கும் வசதி உட்பட வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்க சொன்னபோது நான் அதை தவிர்த்துவிட்டேன் இதுபோலவே அவருடைய இசைகல்லூரி தொடுங்கும் திட்டத்திற்காக ஜுபின் மேதாவிடம் பேச சொன்னார். நானும் இளையராஜாவின் கனவை சொல்லி அப்போய்ண்ட்மெண்ட் வாங்கியபோது கூட இவருடை ஆணவத்தால் அதையும் பல்வேறு நிபந்தனைகளின் மூலம் இவரே கெடுத்துக்கொண்டார். 

30. இதன் வழி தெரிவதென்னவென்றால் அவர் அவரைத்தவிர இந்திய கலைக்கு பெருமை சேர்த்த எந்த இசைக்கலைஞர்களையும் பாராட்டியதில்லை, மரியாதை செய்ததில்லை. இவருக்கு இந்த விருதானது இந்தியாவின் பிற பிரபல கலைஞர்களுக்கு அவமானமானதாகும். 

31. 2011 இல் ஹாலந்திலிருந்து ஒரு வெளிநாட்டவரை வரவழைத்து தனது பாடல்களை ரீமாஸ்டர் செய்யும் பணியை கொடுத்து பல வாரங்களாக அவரை இங்கே தங்க வைத்து வேலை முடிந்ததும் அவருக்கான எந்த ஊதியமும் தராமல் தட்டி கழித்து அவரை மன உளைச்சலுக்கு தள்ளினார். அவருடைய பயண செலவு, மாஸ்டரிங்கு வேலைக்கான உழைப்பு, தங்கும் செலவு என்று எல்லாவற்றுக்கும் செலவு செய்து நஷ்டப்பட்டார். பிறகு நான் தான் அவருக்கு உதவினேன். அந்த வெளிநாட்டவர் இந்திய இசைத்துறை நிறுவனங்கள் பலவற்றோடு தொடர்பு உள்ளவர் என்ற காரணத்தில் இளையராஜாவின் இந்த செயல் எங்கும் பரவியது. பிரான்ஸில் இருக்கும் ஒரு நிறுவனம் என்னிடமே இதைப் பற்றி விசாரித்தப் பொழுது, அவர் பெயருக்கு கலங்கம் வர வேண்டாம் என்று எனக்கு தெரியாது என்று கூறிவிட்டேன். அந்த வெளிநாட்டவருக்கு நான் உதவியது கூட இவரின் பெயருக்கு களங்கம் வர வேண்டாம் என்ற காரணத்தினாலேயே.  

32. இரண்டு வருடமாக வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை நான் வாங்கி வைத்திருப்பதாக வாய் கூசாமல் பொய்யுரைத்தார். நானும் ஒருவேளை அந்த நிறுவனம் அவரை ஏமாற்றி இருக்கிறதோ என்று அதிகார பூர்வமாக விசாரித்தப் பொழுது, அவர்களிடம் அவர் பணத்தை வாங்கிவிட்டார் என்று தெரிந்த போது, ஆன்மீகவாதியாக தன்னைக் காட்டிக் கொள்பவர் எப்படி இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. 

33. என்னிடம் ராயல்டி மட்டுமல்லாது வேறு சலுகைகளும் வாங்கிவிட்டு பத்திரிக்கைகளில் நாங்கள் ராயல்டி தரவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல் பல்வேறு அவமரியாதையான வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆக அவருக்கு வழங்கப்பட்ட பத்ம் பூஷன் விருதை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.  

34. இந்திய நீதிதுறையில் நாங்கள் நம்பிக்கை இழக்காவண்ணம் காவல்துறையும் இனியும் ஆதாரமற்ற புகார்கள் மூலம் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டுகிறேன். இது தொடர்பாக விசாரணை நடக்கும் பட்சத்தில் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருப்பதோடு இது சம்பந்தமாக அனைத்து ஆதாரங்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். 

இப்படிக்கு, 

அகிலன் லெட்சமண்
Managing Director 

Agi Music Sdn Bhd