Thursday, November 24, 2016

இதுவும் கடந்து போகும்

முல்முடி அணிவித்து
சிலுவை சுமந்து
விதிகளில் நடக்கவிட்டனர்.
நாவறண்டு கால்கள் வழுவிழந்து
தரையில் சரிந்தபோது
கருணைக்கு பதில்
எழும்புகளும் நரம்புகளும் நசுங்க
ஆணிகளில் அடித்து
சிலுவையில் அறைந்தனர்.
சுவாசம் திணறி
கண்கள் இருண்டு
தலைகவிழ்ந்த போது
உயிர் இருக்கிறதா என்ற சந்தேகத்தில்
அல்லையில் ஈட்டி நுழைத்தனர்.

அவ்வளவுதான் நினைவில் இருக்கிறது.

இன்று அதேவீதியில்
பழைய புன்னைகையும்
ஒளிரும் கண்களும்
அதே கருணையுடனும்
நடது வருகிறேன்;
அதே கூட்டம்
மூன்று நாட்களுக்கு முன்
மடிந்தவன் என்று ஆச்சரியப்பட்டனர்
ராஜன் என்றனர்
தேவன் என்றனர்
பாதத்தில் விழுந்து வணங்கினர்.

இதுவும் கடந்துப்போகும்.

Sunday, April 10, 2016

Kindle செயளியில் எனது கவிதை புத்தகம்

http://www.amazon.com/dp/B01E14NLNS?ref_=pe_2427780_160035660

https://www.facebook.com/agilan.lechaman/posts/10208699076291799


Friday, April 8, 2016

நம்பிக்கை கொள்


என் கண்ணீர்
மறைத்து
சிவப்பு சாயத்தால்
புன்னகை வரைந்துக்கொள்ளும்
சர்கஸ் கோமாளி 
நான்

என் வலிகள்
மறைத்து
முகமூடி அணியும்
காமிக்ஸ் ஹீரோ
நான்

போலியாய் வாழ்வதற்கல்ல
என் வேடம்

இந்தக் கோர வாழ்க்கையை
எதிர்கொள்ளும் நம்பிக்கையை
நீ பெற வேண்டும் என்பதற்காகவே
நீயே பிரம்மம்

இருண்ட கருவரையில்
கறுத்த கல்லாய்
நிற்கும் என்னை
கடவுள் என நினைத்து
பலநூறு வரங்கள்
கேட்கிறாய் :)

நான் அல்ல
கடவுள்
என சொல்லக் கூட
குரல்வளையற்றவன்

பூஜிக்கிறாய்
மாலைகள இடுகிறாய்
பிரசாதம் அளிக்கிறாய்
அபிசேகம் செய்கிறாய்
ஆராத்தி எடுக்கிறாய்
ஆனால் அசைந்தது கூட இல்லை
நான்

உன் துகிளுறியப்படும் போது
மானம் காப்பவன் அல்ல
நான்
உனக்கு அநீதி இழைக்கப்படும் போது
ஆயுதம் ஏந்த இயலாதவன்
நான்
நீ இறக்கும் போது
ஆயிரம் உறவுகள் கண்ணீர் விட்டாலும்
உன்னை உயிர்ப்பிக்க
முடியாதவன்
நான்

உன் கண்ணீரில்
நனைந்து கரைந்து
நான் தீர்ந்துபோகும் முன்பாவது
உணர்ந்துக்கொள்

நீயே பிரம்மம்
நீயே உண்மை
நீயே ஜெயம்

எனக்கும் அளுத்துவிட்டது
அன்பென்ற பொய்யினூடாக
தினம் தினம் நீ செலுத்தும் பூஜைகள்

இடித்திடு இந்தக் கோவிலை
சிதைத்திடு என் விக்ரஹத்தை

விடுதலை பெறுவோம்
நீயும் நானும்
இந்த கனுவுகளில் இருந்து

Saturday, March 19, 2016

பத்ம பூஷன் விருதுக்கு தகுதயற்றவர் இளையராஜா

To

The President’s Secretariat
Rashtrapati Bhavan, New Delhi, 
India – 110 004.cc. PM Narendra Modi
South Block, Raisina Hill
New Delhi 110011
India


Date : 18 March 2016


பத பூஷன் விருதுக்கு இளையராஜா தகுதியற்றவர். 

  1. நேர்மையற்றவர்
  2. காவல்துறையையும் அரசியல் நட்புகளையும் தனது சுய விருப்பு வெறுப்புக்கு பயன்படுத்திக்கொள்பவர்
  3. சாமன்யரின் உயிருக்கும் உரிமைக்கும் மிரட்டல் விடக்கூடிய கிரிமினல். 
4.  பேராசையாலும் சுயநலத்தினாலும் என்னை மற்றுமன்றி இசைத்துறையில் பலரை ஏமாற்றியவர்.
5.  பிற இசைக்கலைஞர்களை மதிக்கதெரியாதவரும் அவர்களின் புகழில் பொறாமை கொண்டவர்.
6.  எந்த பின்புலமும் இல்லாத பிற நாட்டவரோ அல்லது இந்திய நாட்டின் பிரஜையோ வியாபரம் செய்ய தகுதியான நாடல்ல இது என்ற அவநம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். 
7. இந்தியா ஒரு பாதுகாப்பற்ற நாடாக வெளிநாட்டு பிரஜையான எனக்கு மட்டுமல்ல இங்குள்ள பிரஜைகளுக்கும் அவ நம்பிக்கையை ஏற்படுத்தியவர். 

8. இந்த கடிதம் எழுதுவதின் நோக்கம், இளையராஜாவுக்கு எதிரான வழக்கை நாங்கள் முறையாக எதிர்கொள்ளவிடாமல் எங்களுக்கு இடைஞ்சல் தருவதோடு காவல் துறையின் உதவியுடன் எங்களுக்கு தொல்லைக்கொடுப்பதோடு, எனது இந்திய பிரஜை ஊழியர்களின் உயிருக்கும் பாதுக்காப்பு வேண்டி இதை எழுதுகிறேன். 

பணம் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் இல்லாதவர்களுக்கு ஒரு நீதியும், புகழும் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் அது இல்லாதவர்களுக்கு ஒரு நீதியும்  என்ற நிலை இந்தியாவில் மாறவேண்டும். சால்மான் கான், சஞ்சை தத் போன்றோர் விடுதலை செய்யப்பட்டது போல் இளையராஜா என்ற புகழின் முன் சட்டம் தலைவணங்குவது நீதியை நம்பும் எங்களுக்கு வருத்ததை உண்டு பண்ணுகிறது.

9. மூன்றாவது நிலை குடிமகன் என்னும் அங்கீகாரமான பத்ம பூஷன் என்ற விருதை பெறும் தகுதி இளையராஜா அவர்களுக்கு இல்லை.  கலை என்பது மானுடம் பேசுவது. நேர்மையான உணர்வுகளை பேசக்கூடியது. மனிதமும் நேர்மையும் இல்லாத ஒருவருக்கு அவரின் திறமையை மட்டும் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்குவது என்பது, இந்திய தேசத்திற்கும் இந்திய மக்களுக்கும் அவமானத்தைத் தேடித்தரும் ஒரு செயல்.  

மானுடம் பேசுவது, கலையில் மட்டும் காசுக்காக பேசப்படுவது அன்றி, ஒரு படைப்பாளியின் வாழ்க்கையிலும் அவை பிரதிபலிக்க வேண்டும்.  அந்த வகையில் இளையராஜா முற்றிலும் நேர்மையற்ற, காசுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு இசையமைப்பாளர். அவரின் இசை போதைக்கிணையான ஒரு பொழுதுபோக்கு அம்சமே அன்றி, அது உன்னத கலையல்ல. 

10. நான் அகிலன் லெட்சுமணன், ஒரு மலேசியன். அகி முயூசிக் மலேசியாவின் ஸ்தாபகரும், உயர் மேலாரும் ஆகும். இளையராஜா அவர்களை எனக்கு 2001 இல் இருந்து தெரியும். அவரின் ஆல்பமான குரு ரமண கீதம் எனது நிறுவனத்தின் முதல் வெளியீடாகும். இது வெளிவந்தது 2004 இல். பிறகு 2006 திருவாசகமும், 2007 ஆரம்பத்தில் மியூசிக் மெஸ்ஸையாவும், 2007 இறுதியில் அம்மா பாமாலையும் வெளியிட்டேன். இதில் குரு ரமண கீதத்திற்கும், திருவாசகத்திற்கும் ராயல்டி முறையிலும், அம்மா பாமாலைக்கு ஆயுள் காப்புரிமையும் பெறப்பட்டது. இவை எல்லாவற்றிக்கும், நான் ஏறக்குறைய இந்திய ரூபாய் 7 லட்சம் முன் பணமாக செலுத்தியிருக்கிறேன்.

11. 2007 ஆண்டு இறுதியில் அவர் மிகவும் வற்புறுத்தி அவரது 80ஆம் ஆண்டுகளின் பாடல்களையும், 90 ஆம் ஆண்டுகளின் பாடல்களையும்  ராயல்டி முறையில் எடுத்துக்கொள்ள வற்புறுத்தினார். இதுவரை லைசென்ஸ் பெற்ற எந்த நிறுவனமும் அவருக்கு ராயல்டி தரவில்லை என்று புகார் கூறினார். அதனால், அவைகளை முறையாக செய்யும்படி என்னை கேட்டுக்கொண்டார். அதற்கு வேறு காரணங்களும் உண்டு. அவரது பாடலை தைவானின் ஒரு சீன சினிமா படத்தில் பயன்படுத்துவதற்காக நான் லைசன்ஸ் கொடுத்து அதன் வருமானத்தில் 100% முழுவதையும் இளையராஜாவிற்கு கொடுத்தேன். அதுபோல் ஹலிவூட் பட வாய்ப்புக்காக முயற்சித்த போது அவர்கள் சாம்பிள் கேட்டதால் அவரின் இசையமைப்பில் வந்த லட்ஜா திரைப்படத்தின் 30 நிமிட பின்னனி இசையை கொடுத்தார். என்னுடைய முயற்சியையும், திறமையையும் அறிவையும், நேர்மையையும் கண்டு என்னை 80களின் மற்றும் 90களின் பாடல்களையும் வெளியிட சொன்னார்.

12. ஆனால் மூன்று வருடமாக அவரின் இசையை என்னால் மலேசியா தவிர வேறு எங்கும் விற்க முடியவில்லை. காரணம் எனக்கு கொடுத்த உரிமைகளை ஏற்கனவே பிற நிறுவனங்களுக்கும் கொடுத்து இருக்கிறார். நான் 2009 வரை வியாபரம் செய்ய முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு முறையும் சமாதனம் செய்து அனுப்பிவந்தார்.  அவரின் அனுமதியின் பேரில் பல நிறுவனங்களுக்கு வக்கில் நோட்டிஸ் அனுப்பியும், மொபைல் நிறுவனங்கள் மற்றும் வானொலி நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தேன். 2009 ஆகஸ்டில் யூனிஸிஸ் என்ற கர்னாலை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தேன் காரணம் அவர்கள் இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக சமாளிக்களாம் என்றும் அதற்கான செலவுகளையும் அவர்களே கவனித்துக்கொள்வதாகவும் கூறினார்கள். அவர்கள் தந்த உத்வேகத்தின் காரணமாக அவர்களுடன் ஒப்பந்த செய்து எங்கள் வருமானத்தில், அதாவது 4.8 லட்ச ரூபாயில் ஐம்பது சதவிகிதம் இளையராஜாவிற்கும் கொடுத்தேன்.  

13. 2010 ஜனவரி 5ஆம் திகதி அவரை கொண்டு சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கை சந்திப்பு நடத்தினேன். அதில் எல்லா உரிமைகளும் அவரிடம் இருக்கிறது என்றும் அதை என் நிறுவனத்திற்கு தந்திருப்பதாகவும் கூறினார். அடுத்த நாளே நான்கு நிறுவனங்களின் வழக்கை சந்திக்க நேர்ந்தது. யூனிஸிஸ் வழக்கில் ஆர்வம் காட்டாமல் கைவிட்டதால் எல்லா வழக்குகளுக்கும் அதன் பிரதிவாதிகளான இளையராஜா, இளையராஜாவின் மனைவி மற்றும் அவர்களின் நிறுவனத்தின் சார்பாக பிரதிநிதித்த வழக்கறிஞர்களுக்கும் நானே செலவுகள் செய்யவேண்டி வந்தது. அந்த வழக்குகள் சம்பந்தப்பட்ட இதர செலவுகளையும் நானே செய்தேன். அது பல பல லட்சங்களை விழுங்கியது.  

வழக்குகளின் தகவல்கள் பின்வருமாறு;

  1. C S No. 187 of 2010
  2. C S No. 296 of 2010
  3. O A No. 200 of 2010
  4. O A No. 201 of 2010
  5. O A No. 338 of 2010
  6. C S No. 31 of 2010
  7. O A No. 43 of 2010


இந்த வழக்குகளில் ஒரு வழக்கில் தீர்ப்பானது, இளையராஜாவிற்கு 50 படத்திற்கான உரிமையும் இதர படங்களின் உரிமை வேறொரு நிறுவனத்திற்கும் என்றும் முடிவானது. அதுவும் நிரந்தர தீர்ப்பால்ல. உரிமை யாருக்கு என்று முடிவாக சொல்லவேண்டும் என்றால், தயாரிப்பாளர்களையும் பிரதிவாதியாக சேர்க்கவேண்டும் என்று முடிவானது.  அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  

14. அதில் திருப்தியடையாத இளையராஜா தனது அரசியல் நட்பு வட்டார பிரமுகர்களின் உதவியுடன் காவல்துறையை ஏவி அந்த நிறுவனத்தில் திடீர்சோதனை செய்ததுடன் அவரை எந்த ஆதாரங்களும் இன்றி கைது செய்தார்கள். நான் அதன் சட்டச்செயல்படு முறையைப் பற்றிக்கேட்டதற்கு, நாங்கள் இங்கு ஆதாரங்கள் இல்லாமலேயே யாரையும் கைது செய்யலாம் என்றார். அதன் பிறகு அந்த நிறுவனரை பலமுறை நான் தொடர்பு கொள்ளமுயன்றும் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லை.
Criminal Original Petition 15217 of 2010

15. அதன்பிறகு நான், எங்களுக்கு தீர்ப்பளிக்கப் பட்ட படப் பாடல்களை மட்டும் யூனிஸிஸ் மூலமாக மொபைல் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தோம். யுனிஸிஸையும் இளையராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். எந்த நிறுவனமும் செய்யத் துணியாத செயலைச் செய்தேன். எதிலும் வெளிப்படையாக இருந்தேன். காரணம் நான் அவர் பாடல்களின் தீவிர ரசிகன். அவரின் இசையை உலகின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்ப்பது எனது கடமையாக நினைத்தேன். ஆனால் அவரோ அவர்களிடமும் தனியாக வேறு ஒரு பேரம் பேசியதால், அவர்கள் எங்களின் தொடர்பை துண்டித்ததோடு, பல லட்சம் வருமானம் அவர்களிடம் இருந்து எங்களுக்கு வராமல் செய்தார். அவர்களிடம் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டு கர்னாலில் வழக்குத் தொடர்ந்து அது இன்னமும் நிலுவையில் உள்ளது. 

16. இன்னொரு வழக்கில் வேறு ஒரு நிறுவனத்திடம் ஏறக்குறைய 120 படப்பாடல்களை 20 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு அதுவும் 5 வருடத்தில் காலவதியாகிவிட்டது அதோடு அவர்கள் எனக்கு எந்த தொகையும் தரவில்லை என்று கூறிதான் அதை எங்களிடம் தந்தார். அந்த வழக்கின் வாயிலாக அவர் பணத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் அது 5 வருடம்தான் செல்லும் என்றும் வாதிட்டார். ஆனால் அவர் மீதும் அவர் மனைவின் மீதும் யாரும் கிரிமினல் வழக்கு எடுக்காது இருக்கவேண்டும் என்று, அவர் சொன்ன பொய்களை ஏற்று வழக்கைத் தொடராமல் டிஜிட்டல் உரிமை எங்களுக்கு சேரவேண்டும் என்று வாதாடினோம். அந்த வழக்கும் இன்னும் நிலுவையில்.  

17. இன்னொரு நிறுவனத்திடம் எந்த ஆதாரங்களும் இளையராஜா தரப்பில் இருந்து நிரூபிக்க முடியாததால் அதில் நான் உட்பட இளையராஜாவும் தோல்வி கண்டார்.  

18. மீதம் ஒரு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளது. 

19. 2010 மே இல் இருந்து என் மீது வேறு நிபந்தனைகள் வைக்கத்தொடங்கினார். அதாவது வழக்குகள் முடியும்  வரை காத்திருந்து தீர்ப்புகள் வெளியானவுடன் என்னை விட்டுகொடுக்கும்படி பலமுறை வற்புறுத்தினார். ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் எதுவும் சரி வர நடக்கவில்லை காரணம் நிலுவையில் இருந்த வழக்குகளினால். 2011 வாக்கில் சில அரசியல் மற்றும் தொழில் பிரமுகர்களை வைத்து மிரட்டவும் செய்தார். அதான் காரணமாக 6 மாதங்கள் வரை அவருடன் பேசாமல் இருந்தேன். 

20. பிறகு அவரின் மகன் கார்த்திக் ராஜாவின் மூலம் அது தீர்வுக் காணப்பட்டது. அப்பொழுது எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்திடும் கட்டத்திற்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். ஆனால் நான் இதைவிட்டு விட வேண்டாம் என்றும் என்னைப்போன்ற நேர்மையான ஆள்தான் அவரின் பாடல்களை உலக அளவில் கொண்டு செல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் 2013 ஏப்ரலில் வேறு நிறுவனத்திடம் எனக்கு தெரியப்படுத்தாமலே வேறு ஒப்பந்தம் போட்டு சிடி விநியோகமும் ஆரம்பித்தார்.  அது தெரிந்து நான் கேட்டபோது மீண்டும் விட்டுக்கொடுக்கும்படி கூறினார். ஏற்கனவே அவர் எடுத்த முடிவால்தான் நான் மீண்டும் வியாபரத்தை தொடங்கினோம். அதுவும் இந்தியாவில் நிறுவனத்தை தொடங்கி நிறைய முதலீடு செய்து சிடிகள் வெளியிட்டு இருந்தேன். அது எனது சக்திக்கு மீறிய முதலீடாக இருந்தது. அதனால் வேறு வழியின்றி அவர் மீது வழக்குத் தொடர வேண்டி வந்தது. வழக்கு எண் CS 308/2013. ஆனால் செப்டம்பர் 2014 நிழுவையில் உள்ள வழக்கை மறைத்து தடையுத்தரவு கேட்டு ஒரு சில நாட்களிலேயே தீர்ப்பும் வாங்கினார். நீதிமன்றமும் அவர் தரப்பில் எந்த ஆதாரங்களையும்  கேட்காமல் நீதி வழங்கியிருக்கிறது. இது இந்திய நீதித்துறைக்கு பெரிய அவமானமாகும்.


21. அந்த வழக்கு இன்னும் நிலுவையில், அதுவும் ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நிலையில் செப்டெம்பர் 2014 இல் எங்கள் மீது முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி தடையுத்தரவு பெற்றார்.  அதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்தபோது பல்வேறு அவதூறு செய்திகளின் வாயிலாக எங்கள் மீது மற்றவர்களிடம் இருந்த நட்பெயரை கெடுத்து வந்தார். வழக்கு நடந்துக்கொண்டிருக்கும் போது, முன்பை போலவே தனது செல்வாக்கை பயன்படுத்தி காவல் துறையினரை பயன்படுத்தி, தடையுத்தரவுக்கு பிறகு மூடியிருந்த எங்களது அலுவலகத்தை எந்த ஆவணமும் இன்றி உடைத்து உள்ளே சென்றதோடு அந்த ஏரியாவின் மற்றவியாபாரிகளையும் அதாவது ஆடியோ விற்பனையில் இல்லாத வியாபரிகளையும் மிகவும் மோசமாக நடத்தியதுடன் எங்கள் நண்பரின் வீட்டு சுவரேரி குதித்து அவமரியாதையாக நடத்தியிருக்கிறார்கள் காவல் துறையினர்.
22. அவரிடம் இருந்து நாங்கள் பெற்ற உரிமை மட்டுமின்றி வேறு சில தயாரிப்பாளர்களிடம் நாங்கள் நேரிடையாக பெற்ற உரிமைகளுக்கும் எந்த ஆதாரம் சமர்ப்பிக்காமல் தடையுத்தரவு பெற்றிருக்கிறார். நீதிமன்றமும் எந்த படம் எந்த பாடலுக்கு தடையுத்தரவு கேட்கிறார் என்று விசாரிக்காமல் தடையுத்தரவு வழங்கியிருக்கிறது. 

23. நான் டிஸ்டிரிக் கமிசனரிடம் பேசியவுடன் நரசிம்மனை மிரட்டி உங்கள் முன்பு உங்கள் அனுமதியோடுதான் உங்கள் அலுவலகத்தை திறந்தோம் என்று மிரட்டி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அச்சமாக இருக்கிறது. இந்த நடவடிக்கை மட்டுமல்ல ஏற்கனவே இன்னொரு நிறுவனத்தின் மேலாளரை கைது செய்ததற்கும் கூட எந்த ஆவணங்களையும் காவல்துறை இதுவரை பதிவு செய்யவில்லை.  

24. இதுவரை நான் அவருக்கு எதிராக எந்த கூற்றையும் சொல்லவில்லை காரணம் அவர் திறமையின் மீது இருந்த மரியாதையும் அன்பும். வழக்கையும் முறையாக எதிர்கொள்ள நினைக்கிறோம். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் நீதியை எதிர்கொள்கிறோம். ஆனால் அதற்கும் பல்வேறு தடங்கள் கொடுக்கிறார். 14 மார்ச் 2016 பாண்டி பஜார் இன்ஸ்பெக்டர் எனது இந்திய பங்குதாரரை போனில் அழைத்து நீங்கள் நீதிமன்ற தடையுத்தரவை மீறி வியாபரம் செய்வதாக புகார் வந்திருப்பதாக கூறி காவல் நிலையம் வர சொல்லி மிரட்டினார். சட்டத்திற்கு விரோதமாக எல்லாம் எங்களுக்கு எதிராக நடக்கும் சூழலில் அவரை தனியே செல்லவேண்டாம் என்று கூறி வழக்கறிஞருடன் செல்ல உத்தேசித்தோம். அதற்கு எனது பங்குதாரரை அவமரியாதையாக பேசி மிரட்டியும் இருக்கிறார் அந்த இன்ஸ்பெக்டர்.  இறுதியில் எங்கள் மீது பொய்யான புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து எங்களை விடுவித்தாலும் எங்களது வாக்கு மூலத்தையோ புகாரையோ பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

25. இவர்களின் அச்சுறுத்தலால் எனது பங்குதாரர், ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சிறிது காலம் மலேசியாவில் வந்து தங்கும்படி கூறியிருக்கிறேன்.  ஒரு பாதுகாப்பற்ற சூழலில் மன உளைச்சலுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். நானும் இவரின் பல்வேறு நெருக்கடிகளினாலும் அவரால் ஏற்பட்டப் பொருளாதர நெருக்கடிகளினாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருந்துகள் எடுத்து வருகிறேன்.  இப்படி ஒரு கிரிமினல் புத்திக் கொண்ட ஒருவருக்கு பத்ம பூஷன் விருது என்பது இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய கலங்கமும் அவமானமும் என்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். 

26. ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாகா எந்த ஆதாரங்களும் அற்று எங்கள் அலுவலகத்தை மூடியதால் இந்தியாவின் பிற இசையமைப்பாளர்களின் சிடிக்கான பணத்தையும்  வாங்க முடியாமல் விநியோகமும் செய்யமுடியாமல் இருக்கின்றோம். வேறுவழியின்றியும் இவரின் தொல்லையைத் தாங்கும் சக்தியும் பணபலமில்லாமையும் எங்களின் இந்திய அலுவலகத்தை மூடும் முடிவிற்கு வந்துள்ளோம். 

27. புகழின் உச்சியில் இருக்கும் அவர் தனது தன்மானத்தை பாதுக்காப்பதற்காகவும், பணத்தின் மீதான பேராசையினாலும் எல்லாவிதமான கீழ்தரமான செயல்களிலும் இரங்க துணிந்துவிட்டார். சட்டம் தவறுசெய்யாத எங்களை பாதுகாப்பதாக இல்லை. வழக்கும் பல வருடங்களாக நடந்துவருவதால் நாங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம். வழக்கின் போக்கில் அச்சம் கொண்டு எங்களை வேறுவழிகளில் முடக்க எல்லா முயற்சிகளும் எடுக்கிறார்.

28. 2004 இல் பண்டித் ரவிசங்கருடன் ஒரு ஆல்பம் செய்ய வேண்டும் என்று பேசியபோது அவருடைய வயதுக்கு என்னுடைய இசை குறிப்புக்களை பண்டித் ரவிசங்கரால் வாசிக்க முடியுமா என்று ஏளனமாக கேட்டார். பிறகு அவரை ஒருவாராக சமாதானப்படுத்தி பண்டித் ரவிசங்கருக்கு இமெயில் அனுப்பிய போது அவரது மனைவி, இளையராஜாவின் மீது எங்களுக்கு பெரிய மரியாதை இருந்தது ஆனால் பண்டித் ரவிசங்கரின் ஒரு இசையை சலங்கை ஒலி படத்தில் எங்கள் அனுமதியில்லாம பயன்படுத்திவிட்டார். அதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும் இல்லை, பண்டித் ரவிசங்கரின் பெயரையும் படத்தின் டைட்டலில் இடம் பெற செய்யவும் இல்லை என்று கூறி இளையராஜாவுடன் நாங்கள் இசைதொகுப்புக்கு இணைய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதை இளையராஜாவிடம் சொன்னதற்கு, தயாரிப்பாளர் எனக்கே தெரியாமல் அதை பயன்படுத்திவிட்டார் என்று சொல்லுங்கள் என்றார். ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தவர், எந்த எந்த படம் அவர் இசையமைத்தது என்று கூட தெரியாத அளவு உழைத்தவர் இதை சொன்னதும் பட்டென்று பதில் சொல்கிறார் என்றால் எத்தனைப் படங்களுக்கு இப்படி அனுமதியற்ற இசைகளை உபயோகித்து இருப்பார்? 

29. ஏ ஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டபொழுது அதற்கு நான்தான் காரணம் என்று என்னை சந்தேகித்து திட்டிவிட்டு ஏ ஆர் ரஹ்மானின் பாராட்டு விழாவில் அவரை புகழ்ந்து தள்ளினார். லிம்கா விருது நிகழ்வில் கூட, அவர்கள் வேண்டுமானால் ஏற்கனவே அவர்கள் முடிவெடுத்த பிற கலைஞர்களான ஜேஸுதாஸ் மற்றும் பண்டித் ஹரிபிரஸாட்க்கு கொடுக்கட்டும் நான் வரவிருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அவர்கள் விரும்பினால் பயண செலவு, தங்கும் வசதி உட்பட வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்க சொன்னபோது நான் அதை தவிர்த்துவிட்டேன் இதுபோலவே அவருடைய இசைகல்லூரி தொடுங்கும் திட்டத்திற்காக ஜுபின் மேதாவிடம் பேச சொன்னார். நானும் இளையராஜாவின் கனவை சொல்லி அப்போய்ண்ட்மெண்ட் வாங்கியபோது கூட இவருடை ஆணவத்தால் அதையும் பல்வேறு நிபந்தனைகளின் மூலம் இவரே கெடுத்துக்கொண்டார். 

30. இதன் வழி தெரிவதென்னவென்றால் அவர் அவரைத்தவிர இந்திய கலைக்கு பெருமை சேர்த்த எந்த இசைக்கலைஞர்களையும் பாராட்டியதில்லை, மரியாதை செய்ததில்லை. இவருக்கு இந்த விருதானது இந்தியாவின் பிற பிரபல கலைஞர்களுக்கு அவமானமானதாகும். 

31. 2011 இல் ஹாலந்திலிருந்து ஒரு வெளிநாட்டவரை வரவழைத்து தனது பாடல்களை ரீமாஸ்டர் செய்யும் பணியை கொடுத்து பல வாரங்களாக அவரை இங்கே தங்க வைத்து வேலை முடிந்ததும் அவருக்கான எந்த ஊதியமும் தராமல் தட்டி கழித்து அவரை மன உளைச்சலுக்கு தள்ளினார். அவருடைய பயண செலவு, மாஸ்டரிங்கு வேலைக்கான உழைப்பு, தங்கும் செலவு என்று எல்லாவற்றுக்கும் செலவு செய்து நஷ்டப்பட்டார். பிறகு நான் தான் அவருக்கு உதவினேன். அந்த வெளிநாட்டவர் இந்திய இசைத்துறை நிறுவனங்கள் பலவற்றோடு தொடர்பு உள்ளவர் என்ற காரணத்தில் இளையராஜாவின் இந்த செயல் எங்கும் பரவியது. பிரான்ஸில் இருக்கும் ஒரு நிறுவனம் என்னிடமே இதைப் பற்றி விசாரித்தப் பொழுது, அவர் பெயருக்கு கலங்கம் வர வேண்டாம் என்று எனக்கு தெரியாது என்று கூறிவிட்டேன். அந்த வெளிநாட்டவருக்கு நான் உதவியது கூட இவரின் பெயருக்கு களங்கம் வர வேண்டாம் என்ற காரணத்தினாலேயே.  

32. இரண்டு வருடமாக வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை நான் வாங்கி வைத்திருப்பதாக வாய் கூசாமல் பொய்யுரைத்தார். நானும் ஒருவேளை அந்த நிறுவனம் அவரை ஏமாற்றி இருக்கிறதோ என்று அதிகார பூர்வமாக விசாரித்தப் பொழுது, அவர்களிடம் அவர் பணத்தை வாங்கிவிட்டார் என்று தெரிந்த போது, ஆன்மீகவாதியாக தன்னைக் காட்டிக் கொள்பவர் எப்படி இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறார் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. 

33. என்னிடம் ராயல்டி மட்டுமல்லாது வேறு சலுகைகளும் வாங்கிவிட்டு பத்திரிக்கைகளில் நாங்கள் ராயல்டி தரவில்லை என்று கூறியது மட்டுமல்லாமல் பல்வேறு அவமரியாதையான வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆக அவருக்கு வழங்கப்பட்ட பத்ம் பூஷன் விருதை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்.  

34. இந்திய நீதிதுறையில் நாங்கள் நம்பிக்கை இழக்காவண்ணம் காவல்துறையும் இனியும் ஆதாரமற்ற புகார்கள் மூலம் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டுகிறேன். இது தொடர்பாக விசாரணை நடக்கும் பட்சத்தில் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக இருப்பதோடு இது சம்பந்தமாக அனைத்து ஆதாரங்களையும் வழங்க நான் தயாராக இருக்கிறேன். 

இப்படிக்கு, 

அகிலன் லெட்சமண்
Managing Director 

Agi Music Sdn Bhd

Friday, February 26, 2016

என் கிளைகள்

பல ஆயிரம்
இலைகளால் அடர்ந்து
இருக்கிறேன்

வந்த அமரதான்
பறவைகள் இல்லை

இந்த மரமும்
கபிடலிஸ்களினால்
நிலைக்காது என்று
தானாக கூடுகளில்
அடைப்பட்டு கொண்டன
அவைகள்

காத்திருக்கிறது
என் கிளைகள்

Thursday, February 25, 2016

நிஜம்

பெறும்பாலான சமயங்களில்
நாம் நாமாக
இருக்க முடிவதில்லை

குடும்பமாக
நண்பனாக
சமூகமாக
பிரஜையாக

செயற்கை பூக்களாகவே
வீடுகளில் அளங்கரிக்கப்படுகிறோம்
நிஜம் நிலையாமை
என்ற பயத்தில்

எனக்கேன் கோவில்?

என் முன்னே
இரண்டு கருவறைகள்
ஒன்றில் அழகிய விக்ரஹம்
மற்றது வெறுமையில்

நான் வெறுமையில்
நுழைகிறேன்

விக்ரஹம் இல்லாது
இறைவனை பார்க்க முடியுமெனில்
நானே விகரஹமாய்
உருபெற முடியுமெனில்
நானே கடவுளாய்
ஆக முடியுமெனில்
என்னால் அந்த கருவறை
ஒளிபெருமெனில்

எனக்கேன் கோவில்?

Tuesday, February 23, 2016

அன்பு

என் அன்பு
உன்னை வந்து சேராமல்
இருக்கலாம்
நீ உணராமல் இருக்கலாம்
உனக்கு தெரியாமல் கூட
போகலாம்

அதனால்
பொய்யாகிவிடுமா என்ன;
என் அன்பு?

அது எப்பொழுதும்
துளிர்த்துக் கொண்டே
இருப்பது.
மனம் எங்கும்
இன்று காடாகி கிடக்கிறது

உனக்கும் எனக்குமான
அன்பு
எனக்கும் கடவுளுக்குமான
உறவைப் போல

Friday, February 19, 2016

அன்பின் ஊடாக

இரவைப் போன்றே
வெறுப்பும்
தவிர்க்க இயலாதது

அன்பு,
படைப்பையும்
சக்தியும்
அமைதியும்
உயர்வையும்
தருவது

வெறுப்பு
அவைகளை
நிலைத்திருக்க செய்வது

அன்பின் மீது
மேலும் நம்பிக்கையை
வளர்ப்பது

அன்பின் ஊடாக
நான் வெறுப்பை
தரிக்கிறேன்

என்றும்
அன்பு
உயிர்த்திருக்க

துள்கூ

நான் எல்லா காலங்களிலும்
பிறந்திருக்கிறேன்
பிராத்தனைகளின் மூலம்

என்னை கிருஷ்ணன் என்றும்
இஸ்மாயில் என்றும்
கிருஸ்து என்றும்
முஹமட் என்றும்
புத்தன் என்றும்
காந்தி என்றும்
பலவாறு அழைத்திருக்கின்றார்கள்

நானாகவோ, 
யாருடைய கட்டளையின் பேரிலோ 
பிறக்கவில்லை
எங்கெல்லாம் அடிமை விலங்காலும்
அக்கிரமத்தினாலும்
அநீதியினாலும்
அழுது பிராத்திக்கிறார்களோ
அந்தப் பிராத்தனையில்
உருபெறுபவன்

எனது அசூர பலம்
எனது சித்துக்கள்
உங்கள் பிராத்தனையில்
உருப்பெற்றவை

நான் சூன்யம்
உங்களின் பிராத்தனை
எனக்கு உயிரையும்
உடலையும் சக்திகளையும்
சித்துக்களையும் அளிக்கின்றன

சிலசமயங்களின்
வெறுப்பினூடே உங்கள் பிராத்தனை
திடமாகவும் திண்ணமாகவும்
மேலோங்கும் போது
நான் ஹிட்டலராகவும்
மா ஹோ சியாகவும்
ஸ்டாலினாகவும்
கோட்சேவாகவும்
உருபெருகிறேன்

நம்புங்கள்;
உறுதியாக
பொறுமையாக
ஆழ்ந்து தியானித்து
பிராத்தனை செய்யுங்கள்

நான் மீண்டும்
உருபெறுவேன்
உண்மையின் யோனி வழி
நேர்மையில் நிலைப்போரின்
துன்பங்கள் அழிப்பேன்

வெறுப்பை கைவிடுங்கள்
நான் அரக்கனாக உருபெறுவதும்
கடவுளாக உருபெறுவதும்
உங்கள் பிராத்தனையால் மட்டுமே
சாத்தியம்

நான் அழிவற்றவன்
அழிக்கப்பிறப்பவன்
உங்களின் இடையறா பிரத்தனை
என்னை மீண்டும் 
பிறக்க செய்யும்
இது சத்தியம்


(துள்கூ என்பது திபெத்திய புத்த வார்த்தை)

தடங்களை பின்தொடர்ந்து

உன் காலடி தடங்களை
பின் தொடர்ந்து
வருகிறேன்
பல சமயங்களில்
காற்றிலும்
மழைகளாலும்
மிருகங்களின் தடங்களிலும்
அது காணமல் போக
தாயிழந்தக் குழந்தையாய்
கண்ணீருடன் தேடுகிறேன்

மீண்டும் எங்காவது 
புதிய தடங்களைப் பார்த்தவுடன்
உற்சாகமாகி பின் தொடர்கிறேன்

நீ ஆணா பெண்ணா அலியா
நான் அறியேன்
உன் தடங்களை மட்டுமே
எத்தனை காலங்களுக்கு
தேடுவது?
உன் பாதங்களை
எப்போது நான் காண்பது?

மிருகங்களும்
புதர்களும்
முட்களும் அடர்ந்திருக்கும்
இந்த காட்டில்
நீ மட்டும் ஏன் 
வெறும் கால்களுடன்
அதுவும் கால்தடங்களை
பதித்தப்படி பயணிக்கிறாய்?
எந்தத் தேசத்தை நோக்கி?
எத்தனை காயங்களுடன்?

இதை அறிந்துக் கொள்வதை
தவிர
வேறெதுவும் நான் வேண்டேன்

Saturday, February 6, 2016

நானும் இசைஞானியும் 4.

6 ஆம் திகதி ஜனவரி எல்லா பத்திரிக்கைகளிலும்  செய்தி வெளியானது.  ஒரே நாளில் மலேசியா இந்தியா என எல்லா மீடியாக்களிலும் எனது முகமும் நிறுவனத்தின் பெயரும் பிரபலமானது. ஆனால் 10ஆம் திகதி எல்லா ஆடியோ நிறுவனங்களிடமிருந்தும் நீதிமன்ற ஆணை வரத்தொடங்கியது. எனக்கு, இளையராஜா அவர்களுக்கு மற்றும் அவர் மனைவிக்கும். காரணம் சில ஒப்பந்தங்களில் அவர் மனைவியும் கையெழுத்திட்டிருந்தார். 

எனக்கு இதுதான் முதல் நோட்டீஸ். பயம் ஓரளவுக்கு என்னை விழுங்கியிருந்தது. அதைவிட பயத்துடன் இளையராஜா அவர்களின் மனைவி ஜீவா ராஜா “என்ன அகிலன், பெரிய பிரச்சனையா? எப்படியாவது, எதாவது செய்ய முடியுமா?” என்றார். நான் அவரிடம் பேசிய ஒரே வார்த்தை இதுநாள் வரை இது மட்டும்தான். “கவலை படாதீங்க, எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்”. 

ஆனால் என் பயம் எனக்கு மட்டும்தான் தெரியும், முதல் அனுபவம் என்பதால். ஆனால் அதை யாரிடமும் காட்ட முடியவில்லை. அவரிடம் விளக்கங்கள் கேட்டு இதுவரை அவர் செய்திருந்த எல்லா ஒப்பந்தங்களையும் அப்பொழுது அவர் உதவியாளராக இருந்த திரு பார்த்தசாரதியிடம் கேட்டு வாங்கி படிக்கலானேன். 

அப்பொழுது அவருக்கு ஒரு அழைப்பு. இளையராஜா அவர்கள் எப்படி எங்களிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு பணமும் வாங்கிவிட்டு வேறு ஒருவருக்கு அதை விற்கலாம். அவர்களை சிறைசாலை வரை கொண்டு செல்வேன் என்று மிரட்டல். அகிலனையும் சும்மா விடுவதாக இல்லை நஷ்ட ஈடு கேட்டு இன்னொரு வழக்குத் தொடரப் போகிறேன் என்றெல்லாம் மிரட்டினார். பார்த்த சாரதி மிரண்டு போய். அவரை நீங்கள் நேரில் சென்று சந்திக்கிறீர்களா என்று கேட்டார். விஷயம் பெரிதாகும் முன் சென்று சந்தித்து விடுங்கள் என்றார். பயம் ஆட்டிப் படைத்தது ஆனால் வெளியில் எதையும் காட்டிகொள்ளாமல் ஹீரோ போல் சம்மதித்தேன். ஆட்டோவில் செல்லும்போது எப்படி இதை சமாளிப்பது என்பது மட்டும்தான் மனமுழுவதும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது. 

ஆட்டோவை விட்டு இறங்க வேண்டிய இடத்தில் இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது சீரடி சாய்பாபாவின் பெரிய சுவர் ஓவியம் ஒன்று. 2009 தொடக்கம் முதல் அவர்தான் எல்லாம் என்று வணங்கி வந்தேன். வேறு எந்த தெய்வத்தையும் வணங்கவில்லை. அவரின் புன்னகையும் அந்த ஆழமானா கண்களும் பெரிய நம்பிக்கையை தந்தது. நான் இருக்கிறேன் எதற்கும் கலங்காதே என்பதுபோல் இருந்தது. யார் அந்த ஓவியத்தை வரைந்தது என்று தெரியாது. அவருக்கும், எனது வணக்கங்களும் நன்றியும். 

அந்த ஆடியோ அலுவலகம் சென்றதும், சின்ன பையன் என்று முடிந்தவரை என்னை பயமுறுத்தி பார்த்தார் அந்த நபர். அவர் பக்க நியாயங்களை சலனமில்லாமல் கேட்டுவிட்டு திரும்பிவிட்டேன். பதில் ஏதும் சொல்லவில்லை. எந்த சட்ட வியூகங்களும் அப்பொழுது தெரியவில்லை. நம்பிக்கை மட்டும் இருந்தது. மறுநாள் தேடிப்பிடித்து காப்புரிமை பற்றிய ஒரு சட்ட புத்தகத்தை வாங்கினேன்.  ஓங்கி அடித்தால் ஒருவருக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு பெரிய கனமான புத்தகம். ஒவ்வொரு பக்கமாகப் படித்தேன். காப்புரிமை பற்றி வார்னரில் இருந்தபொழுது கற்றுக்கொண்டதைவிட இந்தியாவில் அதிகமே தெரிந்துக்கொண்டேன். இப்பொழுது ஒரு நல்ல வக்கீல் தேவை. 

அந்த சமயம் ஒருவர் வந்து சேர்ந்தார். இளையராஜாவின் மிகவும் நெருக்கமான நம்பிக்கையான ஒரு நபர். அவர் முன்னமே இளையராஜா அவர்களால் எனக்கு அறிமுகமாகியிருந்தாலும் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாதவர். இந்த முறை வழக்கு சம்பந்தமாக எல்லாவற்றையும் அவர்தான் கவனிப்பார் என்று இளையராஜா அவர்களே சொல்லிவிட்டார். அசாத்தியமாகவும் சமர்த்தியமாகவும் பேசக்கூடிய ஒரு நபர். பல மேல் நிலை தொடர்புகள் எல்லாம் சாதாரணமாக வைத்திருந்து வெளிநாட்டு (அமெரிக்கா) ரிட்டர்ன். 

டில்லியில் இருந்து ஒரு வக்கீலை அவரே முன்மொழிந்தார். அவர் சொல்லும் அறிவுறையின் படியே நடக்க வேண்டும் என்பது இளையராஜாவின் கட்டளை என்பதால் நானும் சம்மதித்தேன். வேறு வழி எனக்கு தெரியவில்லை. சென்னை வந்திரங்கியவுடன் தங்குவது, பயணம் என்று இன்னும் ரூபாய் 75 ஆயிரமும், அவர் சார்பாக நீதிமன்றத்தில் கோப்புகள் வழங்குவது மற்றும் இதர வேலைகளுகென்று அவர் நியமித்த மற்றொரு வக்கீலுக்கென 25 ஆயிரம் ரூபாயுமாக மொத்தம் ஒரு லட்ச ரூபாய் கட்டணம் கேட்டார். நானும் கொடுத்தேன். ஆலோசனைகள் நடந்தது, நீதிமன்றத்தில் வக்காலத்து வழங்கப் பட்டது. திரும்ப டில்லிக்கு சென்றுவிட்டார். ஒரு மாதத்தில் மீண்டும் சென்னை வருவதாகவும் மீண்டும் செலவுகளுக்கென்று ரூபாய் ஒரு லட்சமும் கேட்டார். கடையே விரிக்கவில்லை பணம் மட்டும் செலவானது. ஆனால் நான் இந்த முறை கொடுப்பதாக இல்லை. அவரிடம் நேரிடையாகவே அவ்வளவு பணம் செலுத்து சக்தி எனக்கில்லை. வேறு வழி சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டேன். உடனே இளையராஜா அவர்களின் பாடல்கள் கோடிகள் ஈட்டும் சொத்து. உங்களால் இது கூட முடியாதானனா நீங்க எப்படி வியாபாரம் செய்வது என்று சாமர்த்தியமாக பேசினார். நான் என் நிலையை இளையராஜா அவர்களிடம் சொன்னேன். அவரும் அவரின் நண்பரிடம் பேசினார் ஆனால் அந்த நபரோ முடியவே முடியாது என்றும், இவரை விட்டால் இந்த வழக்கு நமக்கு தோல்விதான் என்று உறுதியாக சொன்னார். இந்த செலவுகள் ஒரு வழக்குக்கு மட்டுமே. இப்பொழுது நான் எதிர்கொண்டிருப்பதோ 3 வழக்குகள் அதிலும் இளையராஜா, அவர் மனைவி மற்றும் என் நிறுவனம் எல்லாவற்றுக்கும் நான் தான் கட்டணம் செலுத்தியாக வேண்டும். நான் எதிர்பாராத இக்கட்டான நிலை.  ஆனால் காப்புரிமை சட்டம் படித்ததில், நிச்சயம் வென்றுவிடலாம் என்ற என் அறிவின் மீது நம்பிக்கையும் என் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கையும் இருந்தது. 

இப்பொழுது வக்கீல் மட்டுமே. அதனால் இளையராஜாவிற்கு நெருக்கமான் அந்த நபரை தனியாக சந்தித்து எனது நிலையை சொல்லி வேறு வக்கீல் பார்க்கலாம் செலவும் குறைவாக என்றால், அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஹோட்டல் வந்து - தங்குவது, பயண செலவு, வக்கீல் செலவு என்று கடன் பட ஆரம்பித்த தருணங்கள் - சாய்பாபவிடம் வேண்டி நான் நினைக்கும் வக்கீலா அல்லது அந்த நபர் சொல்லும் வக்கீலா என்று சீட்டுக்குலுக்கிப் பார்த்தேன். குழம்பும் நெருக்கடியான தருணங்களில் இப்படிதான் செய்வேன். நான் எதிர்பாரா வண்ணம் அந்த நபர் சொல்லும் வக்கீலடமே போ என்று வந்தது. அதிர்ச்சியானேன். பணத்துக்கு? சரி சாய்பாபா முடிவு அதுதான் என்றால் அப்படியே நடக்கட்டும் என்று மறுநாள் அவரிடம், “சரி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதன் படி செய்கிறேன்” என்று சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தவர் பிறகு என்னை காபி குடிக்க அழைத்து சென்று ஏதேதோ கதைகள் பேசிவிட்டு, சரி நீங்கள் யாரை மனதில் வைத்திருக்கிறீர்கள் சொல்லுங்கள் என்றார். பெயரை சொன்னேன். 

நான் சொன்ன வக்கீல், டில்லியில் இருந்து வந்தவர் அவருடைய கோப்புகளை நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக அமர்த்திய பிரபலமில்லாத சாதாரண வக்கீல். ஆனால் அவர் மீது எனக்கு ஒரு அசாத்திய நம்பிக்கை மட்டும் இருந்தது. அவரது முழு பெயரையும் கேட்டார் எனக்கு தெரியாது. எப்படி இருந்தார் என்று அடையாளங்கள் கேட்டார்.  இவையெல்லாம் என்ன சாதி என்று தெரிந்துக்கொள்ளும் உத்திகள் என்பது அப்பொழுது எனக்குத் தெரியாது. பிறகு சரி நான் வந்து அவரை பார்க்கிறேன் என்று என்னை அழைத்துக்கொண்டு அவரை சந்திக்க சென்றோம். இருவரும் கொஞ்சம் நேரம் பேசிய பிறகு என்னிடம் வந்து நாங்கள் என்ன பேசினோம் என்று தெரியுமா என்றார். என் பக்கத்திலேயே அவர்கள் பேசிக்கொண்டாலும், எனக்கு அது புரியவில்லை. அவைகள் ஒரு Code Words. அவர் சொன்னார் அவர் “நம்ம ஆளு” கவலைய விடுங்க, இவரே நமக்கு போதும் என்று; இப்படி எல்லாம் வேறு இருக்கிறதா என்று அப்பொழுதுதான் தெரிந்தது.   

ஒருவழியாக ஒரு பிரச்சனை தீர்ந்தது. புது வக்கீலும் அவர் இளையராஜாவிற்காக அமர்த்திய இன்னொறு வக்கீலும் ஒரு சின்ன தொகை மட்டுமே வாங்கினார்கள். வழக்கை நடத்தும் துணிவு வந்துவிட்டது. வழக்கு சில மாதங்கள் கோர்டில் நடந்து வந்தது. அப்பொழுதுதான் திடீரென ஒருநாள் எனது வக்கீல் என்னை அழைத்து சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஒரு விஷயத்தை சொன்னார். “அகிலன் இளையராஜாவிற்கு நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவர் இந்த வழக்கை நடத்துவதற்காக இளையராஜாவிடம் சில கையெழுத்துக்கள் வாங்க சொல்லியிருக்கிறார் அதில் உங்களிடம் இருக்கும் உரிமங்களையும் இளையராஜா அந்த நபருக்கே மாற்றி எழுதும்படி சில பேப்பர்களை வைத்திருக்கிறார். அவர் மீது உள்ள நம்பிக்கையினாலும் நட்பினாலும் அவர் சொல்லுமிடத்திலெல்லாம் இளையராஜா கையெழுத்திடுவார் என்று கூறியிருக்கிறார்.  உங்களுக்கு எப்படி இந்த உரிமங்கள் எல்லாம் வரமுடியும், அவன் என்ன சாதி என்று இன்னும் பலவாறு கேவலமாக பேசினார். நான் உங்களிடம் பணம் வாங்கியிருக்கேன் எனது தொழில் ethic படி அது சரியில்லை அதுவும் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் வீழ்வதை என்னால் பார்க்க முடியாது அதனால் சொல்கிறேன், சுதாரித்துகொள்ளுங்கள்” என்றார். 

இது இன்னொரு அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்பில் சில பேரை புகார் இல்லாமலேயே கைது செய்திருக்கிறார். “எப்படி சார் இதெல்லாம். அது சரியில்லையே” என்றதற்கு. “என்ன அகிலன் நீங்க, இந்த ஊர்ல நாங்க கேஸே இல்லாமல் கூட கைது செய்வோம்” என்றார் நக்கலாக.  இளையராஜா இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இவர் செய்யும் இந்தக் காரியத்தை எப்படி அவரிடம் சொல்வது? பல சமயங்களில் அவரிடம் மிகவும் உரிமையாகவும் நெருக்கத்துடனும் இருப்பவர் இளையராஜா. இளையராஜாவைப் பற்றி வெளியிலும் மீடியாக்களுக்கும் தெரியாத விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார். இளையராஜா அவர்களின் மீது இவருக்கு மரியாதையில்லை; ஏதோ ஒரு ஆதாயத்திற்காக பழகுகிறார் என்பது மட்டும் தெரிந்தது. இளையராஜாவிடன் பல முறை அவரை பற்றி சொல்ல முயற்சித்திருக்கிறேன் ஆனால் இளையராஜா அவர்கள் அதற்கு இடம் தரவில்லை.  அவரை பற்றி மிகவும் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் பேசியிருக்கிறார். 

ஆனால் இந்த முறை இதை சொல்லியே தீரவேண்டும் என்று முடிவெடுத்து, போனில் வக்கீல் சொன்னதை சொல்லிவிட்டேன். இளையராஜாவிடமிருந்து மெளனம் மட்டுமே சிறிது நேரம் வந்தது, பதில் இல்லை. பிறகு நான் வக்கீலிடம் பேசுகிறேன் என்று கூறிவிட்டு எனது வக்கீலுக்கு போன் செய்திருக்கிறார். அதன் பிறகு வக்கீல் பதரிக்கொண்டு எனக்கு போன் செய்தார் “என்ன அகிலன் அப்படியே அவர்கிட்ட சொல்லியிருக்கீங்க? நான் எப்படி இப்போ அந்த நபரை எதிர்கொள்வேன்? நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என்றால் அவர் என்னை என்ன நினைப்பார் என்று புலம்பினார்”. பிறகுதான் தெரிந்தது அந்த நபர் என் உரிமத்தை மட்டும் அவர் பெயரில் மாற்ற சொல்லவில்லை, இளையராஜா அவர்கள் சம்பந்தப்பட்ட பல பல விசயங்களிலும் இதுபோல பல மோசடிகள் நடக்க இருந்திருக்கிறது என்பது. இது தெரிந்ததும் அவருடனான தொடர்பை இளையராஜா உடனே நிறுத்திவிட்டார்.  

ஆனால் அதன் பிறகு ஒருமுறைக் கூட அவரைப் பற்றி எதுவும் மோசமாகவோ வருத்தமாகவோ பேசவே இல்லை. அதற்கான பல சந்தர்ப்பங்கள் அமைந்தும் இளையராஜாவிடமிருந்து  மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது. 

வழக்கு முடியும் தருவாய் இன்னொரு வெளிநாட்டு ரிட்டர்ன் ஒருவர் இளையராஜா அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.  இன்னொரு பிரச்சனை எனக்கு காத்துக்கொண்டிருந்தது.  

தரிசனம்

உன் இசையின்
சுவரங்கள் நான்

உன் சிரிப்பில்
ஒலிப்பவன் நான்

உன் கோபத்தில்
எரிபவன் நான்

உன் வெற்றியில்
களிப்பவன் நான்

உன் கண்ணீரில்
கசிவதும் நான்

உன் தனிமையின்
விரக்தியும் நான்

உன் பிதற்றலில்
உண்மை நான்

உன் பயணத்தில்
சுவடுகள் நான்

என்னை தவிர்த்து
எழுதப்படாது
உன் சரித்திரம்

நீயே வடித்தாலும்
மறைக்கப்படாது
என் தரிசனம்

Friday, February 5, 2016

குழந்தைகள்

குழந்தைகளை
வளர்ப்பது எளிது;
நீங்கள் அதிகாரம்
செலுத்தாதவரை

அவர்களின் கல்வியில்
ஏன் உங்களுக்கு
இவ்வளவு வன்மம்
உங்கள் இயலாமையின்
விரக்தியா?

அவர்களின் பண்புகளில்
ஏன் இத்தனை பயம் 
உங்கள் ஒழுக்கமீறல்களின்
வெறுப்பா?

ஒருமுறை 
அவர்களின் உலகத்தினுள்
நுழைந்து பாருங்கள்;

உங்கள் இத்தனை கால 
வாழ்நாள்
எத்தனை அற்பமானது 
என்பது புரியும்

கடவுள் நான்

இருளில்
பயம் ஏன்?
நான் உங்கள்
நிலவு

உங்கள் கற்பனை
பேய்களை நம்பி
கோவில்களில் 
ஏன் நுழைகிறீர்கள்?
நான் உங்கள்
தேவன்

பாதைத் தவறியவர்களின்
நிலப்படம்

வயது முதிர்ந்தோரின்
ஊன்றுகோள்

இறந்தோர்களின்
ஆத்மா.

உங்களுடனே
உங்களில்
எப்பொழுதும்
இருப்பவன்

கண்களை திறந்து
பாருங்கள்
நான் கொம்புகள்
அற்றவன்

இன்னும் உறங்கிக் கொண்டிருப்போரே;
உங்களின்
இனிய கனவு

மறுக்க இயலா
உண்மை நான்

நீங்கள் மறுத்தாலும்
கடவுள் நான் 

உங்களின் பிம்பம்

நட்சத்திரங்கள்
என் காலடியில்

கிரகங்கள் முழுதும்
தம்புராவின் நாதத்துடன்
சஞ்சரிக்கும் நாரதன்

கலகங்கள் விளைவிக்கும்
கண்ணன்
அதை எப்பொழுதும் 
நன்மையில் முடிக்கும்
பரமாத்மா

பித்தன் என்போருக்கு
சாம்பல் பூசி
கஞ்சா எடுக்கும்
சித்தன்

சித்தன் என்போருக்கு
வரங்கள் அளிக்கும்
புத்தன்

மனிதானாக
என்னை காண்போருக்கு;
நான், நானல்ல

உங்களின்
பிம்பம்

தேவதை

காதலின் போது
அறியவில்லை
கலவியின் போதே தெரிந்தது
அவள் உண்மையுருவம்

அவள் இதயம்
கறுத்துப்போய் இருந்தது. 
இதழில் முத்தமிட்டு
என் உயிர்காற்றை
உள் செலுத்தினேன்;
அது உயிர்பெற்று
சிவப்பானது

அற்புதமான 
தாள இடைவெளியில்
தொடர்ந்துக் கொண்டிருந்த 
எங்கள் சுகத்தினூடே
அவள் கண்களை
காணவேண்டும் என்று 
காதில் ரகசியமாக 
கெஞ்சினேன்
அவள் திறந்ததும்
அது கோர சிவப்பாக 
கணல் எரியும் குளமாக
இருந்தது 

அவள் கண்களில் முத்தமிட்டு 
அதற்கு ஜீவன் தந்தேன்.
இப்பொழுது அவைகள்
ஒளிர்ந்தன

இறுதியாய்
அவளின் நிஜவுருவம்
வெளிப்பட்டது

பயம் கொள்ளவில்லை.
அவளை படுக்கையில் 
குப்புறக் கிடத்தி; 
கொம்புகளை ஒடித்து;
நாவால் 
உடலெங்கும் நக்கி;
அவள் அணல் தேகத்தை
சாம்பலாக்கி;
விரல்களால் 
தலைவாரி விட்டு;
முத்ததால் முகம் 
கழுவி விட்டு;
பற்களால் நகங்களை
நறுக்கிவிட்டேன்.

சாத்தானாய் வந்தவள்
இப்பொழுது 
என் படுக்கையறையின் வெளியே 
தேவதையாக

நடனமாடிக் கொண்டிருக்கிறாள்
தேவர்களின்
மொழியில்,
முனுமுனுத்தபடியே

Sunday, January 24, 2016

உனக்கென்று
ஒரு இதயம்
இருக்கிறதா ?
நான் அறியேன்.

ஒருவேளை
உனக்கு இதயம் இல்லை
எனில்
என்னுடையதை
எடுத்துக்கொள்

அது
சேர வேண்டிய
பாதுக்காப்பான  இடத்தில்
ஒப்படைக்க பட்டது
என்ற நிறைவில்
நான் மரித்திடுவேன்

நான் நானாகவே
உன்னில் இருப்பது மட்டும்
போதுமானது
எனக்கு

- அகிலன் லெட்சமன்
எதிர்ப்பார்ப்புகளோடு
வந்துவிடாதே
என் வீட்டிற்கு

அன்பைத் தவிர
வேறெதுவும் இல்லை
என்னிடத்தில்

நீயும்
அன்பை மட்டுமே
எதிர்பார்த்து வந்தால்
நிரந்தரமாக என்னுடன்
தங்கிவிட்டால்

மீண்டும் மீட்டு வருவேன்
அனைத்தையும்

உனக்காக

- அகிலன் லெட்சமன்

காதல்

காதல்
அன்பில் தொடங்கி
ஆசையாகி
எதிர்பார்ப்புகளாய்
பெருகி
ஏமாற்றங்களில்
விழுந்து
வெறுப்பாகி
விரோதமாகி
மீண்டும் அன்பாகி
தொடர் பயணமாகவே
இருக்க வேண்டுமா?

காதலில்
மட்டும் நிறைவடைய
என்னால்
முடியவில்லையே!

என் பயணம்
தடைப்படும் இடம்
எது வென்று
நான் அறியேன்
அதையும் உன்னிடமே
விட்டு விடுகிறேன்

உன் பதிலுக்காக
இன்னமும்
காத்திருக்கிறேன்
என்பதை மட்டும்
மறந்துவிடாதே

- அகிலன் லெட்சமன்

எனது வெற்றி

நான்
ஒவ்வொரு கணமும்
வென்றுக்கொண்டேதான்
இருக்கிறேன்

எனது போரையும்
உன் இதயத்தையும்

மற்றவர்களுக்கு
அது தெரியாமலேயே
போகட்டும்
அதனால் என்ன?

எனது ஒருபாகம்
வன்முறையால் ஆனது
என்றாலும்
எனக்கு இன்னொரு பாகம்
இருப்பதை
நீதான் கண்டடைய வைத்தாய்

அது அன்பு

அதன் வழி நான் வென்ற
உன் இதயம்
எனது நிரந்தர தேசம்

- அகிலன் லெட்சமன்

எதிரிகள்


எதிரிகள் எந்த எந்த
திசைகளில் இருந்து
வருகிறார்கள்;

பொறாமை
வெறுப்பு
பேராசை
பெரும் காதலினுடாகவும்
கூட

நம் தோழர்கள் தோழிகளிடம்
இந்த உணர்வுகள்
இருக்காதா என்ன?

எதிரி
உங்கள் உறவுகளுக்கு
வெளியில் இருந்து
வருவதே இல்லை
நம்மிடையே நம்முடனே
இருப்பவர்கள்தான்
நமது நாளைய
எதிரிகள்
சில சமயங்களில்
நமது சிறு சிறு
தவறுகளின் வழி
நாமே
வளர்த்தும் விடுகிறோம்

ஏன், இவைகள்
நம்மிடத்திலும்
இல்லையா என்ன?
நாமும் அவர்களின்
நாளைய எதிரிகள்தான்
எதாவது ஒரு
திசையினூடாக

 - அகிலன் லெட்சமன்
நான் வழிதவறிய
தருணங்களில்
என் வழிகாட்டி

நான் சரிந்து வீழும்
தருணங்களில்
என் தலையணை

நான் தள்ளாடும் போது
என் காலூண்றி

என் கோபங்களின் போது
நீ கண்ணாடி

இவை எல்லாமும்
நான் வேண்டாமலேயே
உன் காதலால்
நிறைவு செய்தாய்.

நான் வேண்டுவது
ஒன்றுதான்
என் காதலியே...

நான் முடிகின்ற இடத்தில்
என் புதிய
தொடக்கமாய் இரு

- அகிலன் லெட்சமன்
நான் தேடிய இடங்களில்
நீ இருந்ததில்லை
நான் தொலைத்தவர்களிடத்திலும்
நீ தென்படவில்லை
நான் இழந்தவைகளிலும்
நீ இல்லை

உன்னில் என்னை
உணர்வதாலேயே
உன்னை மட்டுமே
தேடுகிறேன்

உன்னை ஏன்
எப்பொழுதும்
என்னிடம் இருந்து
ஒளித்துக் கொள்கிறாய்?
பல தேசங்களில்
உன்னை தேடி
என்னை ஏன்
அலைய விடுகிறாய்?

உன் புகழ்
அறியாவரையில்
நான் உன்னை துறந்திடக்கூடும்
என்று;
என்னை
மீண்டும் மீண்டும்
தோல்வியிலும் விரகத்தியிலும்
திரியவிடுகிறாயா?
என் காதல்
பெறும் தகுதி
உனக்கில்லையா?
அல்லது
எனக்கில்லையா?

தனிமையில்
ஒவ்வொரு இரவும்
வாசலையே பார்த்துக்கொண்டிருக்கேன்
நீ என் வாசல் மணி ஒலிக்க
கூடுமென

நான் அயர்ந்து போய்
தூங்கினாலும்
கதவுகளை மூடுவதில்லை
ஒருவேளை
என் களைப்பை நீற்க
நான் எதிர்பாரா தருணங்களில்
என் அறையில்
நீ வந்து நிற்கக் கூடும்;
உன் அளவில்லா
கருணையின் காரணமாய்,
எனக்கிருக்கும்
அளவில்லா
அதே அன்பின்
காரணமாய்.

பாதுகாப்பற்று தூங்குவதில்
எந்த அச்சமும்
எனக்கில்லை

உன்னை தவிர
இழப்பதற்கு
வேறெதுவும் பெரிதாக
இங்கு இல்லை

பணத்தால்
உன்னை வாங்க முடியாதெனில்
அதை பாதுகாப்பதில்
என் கவனம் இல்லை

நவீன பொறிகளில்
நான் வீணடிக்கும்
பொழுதுகளில்
உன்னை உணர
முடிவதில்லை எனில்
களவுகளில் எனக்கு
அச்சம் இல்லை

உன் வரவை
எதிர்பார்த்து,
என் வாசல்
எப்பொழுதும் திறந்தே
இருக்கும்

என்னையே
எதிலாவதோ
யாரிடதிலாவதோ
எதனிடத்திலாவதோ
தொலைப்பதற்குள்
வந்துவிடேன் !

Saturday, January 23, 2016

என்னிடத்தில்
என்ன இல்லை?
எல்லாமும் இருக்கின்றது
நீ வந்தால்
சுகிப்பேன்

உன்னிடத்திலும்
எல்லாமும் இருக்கிறது
நான் இல்லாது மட்டுமே
உன் களங்கம்

தூரங்கள் தாண்டி வா
காலங்கள் கடந்து வா

ஒன்றிடுவோம்
உணர்ந்திடுவோம்
ஒளிர்ந்திடுவோம்

- அகிலன் லெட்சமன்

முப்புணர்ச்சி

நீயும் நானும்
மட்டுமே
நிறைவு செய்ய இயலுமெனில்;
தனித்திருப்பேன்
காத்திருப்பேன்
காதலில்

அது இயலுமா?
முப்புணர்ச்சி மட்டுமே
சாத்தியம் என்கிறேன்!

உடலில்லா உன்னை
புணர்வதற்கு
வேறென்ன வழி?

- அகிலன் லெட்சமன்
எனது
எல்லா வழிகளும்
உன் வாசலையே
வந்தடைகிறது

உன்னையே
அருந்துகிறேன்
உண்கிறேன்

எனது வெறுப்புகளில்
உன்னை கழிவுகளாய்
நீயே வெளியேறுகிறாய்

எனது அன்புகளில்
உன்னை சக்திகளாய்
நிறைக்கிறாய்

கழிவு உடலில்
உயிராய்
இருள் வெளியின்
நிலவாய்

உன்னில்
முடியட்டுமே;
புதிய தொடக்கம்!

மீண்டும்
தொடர்வோம்;
படர்வோம்;
முடிவோம்;
மீண்டும்....

- அகிலன் லெட்சமன்
என் தேசத்தின்
ராணி
என் கஜனாவின்
செல்வங்கள் நீ
என் வெற்றிகளின்
தளபதி

ஆனால்
நீ அயர்ந்திருக்கும்
பொழுதுகளில்
உன் கால்களை பிடித்துவிட
என்னை நீ
அனுமதிப்பதே
எனது பேரின்பம்

உன்னுடன்
புணர்ந்திருக்கும்
தருணங்களே
எனது உச்சம்

நான்
எல்லா வெறுப்புகளும்
கலைந்து,
உன்னை
கடவுளாய்
உணர்வது;
அத்தருணங்களில் மட்டுமே

- அகிலன் லெட்சமன்

நிலவு

மேகங்கள்தான்
அலைந்தும் திரிந்தும்
மறைத்தும் மறைந்தும்
செல்கின்றன

நிலவு
இன்னமும்
நிலவாகவே தான்
இருக்கிறது

- அகிலன் லெட்சுமணன்

அன்பு

உன் வெறுப்பால்
என்னை தீயிடுகின்றாய்
நான் ஒளிர்கிறேன்

பொறாமையினாலும்
இயலாமையாலும்
உனது அனைத்தையும்
என்னில் எறிகின்றாய்
நான் ஜொலிக்கின்றேன்

கோபத்தில்
உன்னையே என்னில்
இழக்கின்றாய்
நான் பெரும்
ஜோதியாகின்றேன்

என்னை
அணைக்கும் சக்தி
உன்னிடத்தில் இல்லை

அது அன்பு
:)

- அகிலன் லெட்சுமணன்