Monday, April 6, 2015

தூரம் அருகே

மனிதர்கள்
சூழல்கள்
உலகம்

யாவும் காணல் நீர் போல்
அந்நியப்பட்டு நிற்கிறது.
மிகத்தொலைவில்

போர்களைப் பார்க்கிறேன்
குருதிகள் தெரியவில்லை

ஓலங்கள் கேட்கிறது
கண்ணீர் தென்படவில்லை

சிரிப்பொலி உணர்கிறேன்
உங்கள் முகங்கள்
தெரியவில்லை

யாவும் திரை ஓவியமாய்
எந்த சலனத்தையும்
உண்டு பண்ணவே இல்லை
என்னில்

எனக்கு பின்னே
விரிந்திருக்கும்
இந்த பிரமாண்ட இருள் மட்டுமே
எனது ஆச்சரியங்கள்
தேடல்கள்
தேங்கல்கள்

சலனமற்று
உற்று ஊடுருவி
அனுபவிக்கிறேன்
இந்த வெற்று
இருள் வெளியை

இது அர்த்தமுள்ளதாய்
இருக்கிறது


06.04.2015


எனது கவிதையை மீட்டெடுத்த பூங்குழலி வீரனுக்கு, நன்றி :-)





No comments: