Thursday, July 29, 2010

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறேன்

நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தேன்.  இப்பொழுது மீண்டும் எழுத தொடங்கியுள்ளேன். எப்பொழுதும் போல் வல்லினத்திற்கு முதலில் அனுப்பியுள்ளேன். அவர்களுக்கு பிடித்திருந்தால் 'சினிமா இசை தீர்ந்து விட்டது' என்ற கட்டுரை ஆகஸ்டில் வெளிவரலாம்.

அதற்கு முன்பாக நான் எழுத நினைத்து முடியாமல் போன சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நாகூர் செஷன் இசை தொகுப்பு வாங்கிய போது சுஃபி இசையைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். சுஃபி இசைக்கு பல முகங்கள் உண்டு அதில் ஒன்று தமிழ் நாட்டு சுஃபி இசை. சுஃபி இசை சினிமாவில் இதற்கு முன்பே பல சமங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் மீனவர்கள் இசையாகவும் படகோட்டிகளின் இசையாகவும்தான் எண்ணி வரப்பட்டிருக்கிறது. இதில் எது எதை உள்வாங்கிக் கொண்டது என்பது நாகூர் வாசிகளுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். அல்லது மீனவர்களின் இசை சுஃபி இசையாய் பிரபலமடையவோ அல்லது சுஃபி இசை மினவர் சமூகத்தால் பிரபலப்படுத்தபட்டதற்கோ ஆதாரமாக ஏதாவது ஆராய்ச்சிகள் நடந்திருக்கலாம். அதை தெரிந்துகொள்ள அவலாக இருக்கிறேன். நாகூர் செஷன் இசைத் தொகுப்பை கேட்கும் வரை எம் எஸ் வியின் படகோட்டியில் வரும் தரைமேல் பிறக்க வைத்தான், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல்களும் இளையராஜாவின் செம்பருத்தியில் வரும் கடலிலே தனிமையில் போனாலும் மற்றும் கடலிலே எழுகிற அலைகளை கேளடியோ பாடல்கள் சுஃபி இசையின்  அடிப்படையில் அமைந்தது என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தமிழ்நாட்டு சுஃபி இசை மட்டும்தான் இப்படி. ராஜஸ்தான் சுஃபி இசை, ஈரான் சுஃபி இசை என்று ஒவ்வொரு பிரதேசத்திற்கும் மாறுப்பட்டு ஒலிக்கிறது சுஃபி இசை.

*****

ஏ ஆர் ரஹ்மான் அவர்களில் ராவணன் இந்தி ஆல்பத்திற்கும் தமிழ் ஆல்பத்திற்கும் மாஸ்டரிங்கில் (Mastering) பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள். இரண்டும் இரு வேறு காரணங்களுக்காக அணுகப்பட்ட மாஸ்தரிங் முறை. அதே திரையில் இறுதியாக வரும் 'நான் வருவேன்' என்ற பாடலை ஒலிவட்டில் வெளியிடும் போது மிக்சிங்கை (Mixing) ஏன் அவர் அலட்சியமாக கையாண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

*****

புதிய ராபின் ஹூடின் பின்னனி இசை மிகவும் அபாரம்.

*****

கிரிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) inception திரைப்படமும் ஹன்ஸ் சிம்மரின் (Hans Zimmer) இசையும் படைப்பாக்கத்தின் உச்சம்.

*****

2 comments:

Anonymous said...

நீங்க‌ள் எழுதுவ‌தை நிறுத்த‌க்கூடாது என்ப‌து என் அவா!

ம‌.ந‌வீன்

YOKESH said...

அகிலன் அவர்களே..
கண்டத எழுதி..வோட்டு போடுங்கன்னு சொல்லி ஹிட்ஸ் எத்திக்கனும்னு நினைக்கறவங்க மத்தியில உங்க பதிவுகள் ஒரு மிகச்சிறந்த முன்னோடி. உங்களோட பணிமிகுதி புரியிது. நேரமும் அவகாசமும் கிடைக்கும் போது இது போல பல கட்டுரைகள எதிர்பார்கிறேன். குறிப்பா பின் நவீனத்துவ இசை கட்டுரையும், இசைத்துறை பற்றிய கட்டுரையும் நான் தகவல் பொக்கிஷமா பாக்கறேன்.
ஆவலுடன்,
-உங்கள் வாசகன்