Friday, June 4, 2010

காப்புரிமை அறியாமையில் இந்தியர்கள்

காப்புரிமை அறியாமையில் இந்தியர்கள் என்று நான் எழுதிய கட்டுரைக்கு சில குறிப்பிட்ட நபர்கள் தொடர்ந்து தளராமல் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக சில நண்பர்களே வேறு வேறு பெயரில் எழுதுவது.

என்னுடைய இந்த கட்டுரையில் எந்த மாற்று கருத்தும் நான் கூறப்போவது இல்லை.  நான் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கவில்லை என்பதுதான் குற்றசாட்டு.  சும்மா INDIA IN COPYRIGHT VIOLATION என்று சும்மா கூகலில் நீங்கள் டைப் செய்தாலே பல இணைகளை நீங்கள் பார்க்கலாம். அதில் பலவும் ஆய்வு கட்டுரைகள். அதில் ஒன்று இந்தியில் தயாராகும் 10 படங்களில் 8 படங்கள் ஹலிவூட் காப்பி என்கிறது. இந்தியாவில் காப்பிரிமை மீறல்களை சட்டப்படி நிறுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களையும் விவாதிக்கிறார்கள்.

அகி மியூசிக் இந்தியாவில் மேற்கொண்டுள்ள பல சட்ட நடவடிக்கைகளின் வழி இங்கு காப்புரிமை என்பது சட்டரீதியாக எந்த அளவு புரிந்துணர்வில் உள்ளது என்பது கண்கூடு. என்னுடைய கணக்கெடுப்பின் படி 80% சதவிகித வருமானத்தை ஒரு பாடலோ அல்லது படமோ ரிலீசான முதல் வாரத்திலேயே இந்த காப்புரிமைகள் மீறலின் வழி இழந்து விடுகிறது. இன்று எல்லா இந்திய இசை நிறுவனங்களும் கலைஞர்களும் அசலை வாங்கும் நபர்களை மட்டும் சார்ந்தே தனது தொழிலை தொடர்ந்து வருகிறார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுதான் அவர்களின் வட்டம் உள்ளது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.

மேலை நாடுகளில் இந்த காப்புரிமை மீறல்கள் பாதிப்பு தந்தாலும் அங்கு பலவும் பகிரங்கத் திருட்டு, ஆனால் நம்மிடையே நடப்பது அறியாமையின் வழி நடக்கும் திருட்டு. அங்கு திருட்டும் காப்புரிமை மீறலும் பெரிதும் பாதித்திருப்பது குருந்தட்டுக்களைதான். அதனால்தான் அவர்கள் டிஜிட்டல் அல்லது பதிவிரக்க வசதியில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். You Are Beautiful என்ற பாடல் 3 பில்லியன் பதிவிரக்கம் ஆனது, சட்டபடி. நம்மிடைய எப்படியும் மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும் சட்டவிரோத பதிவிரக்கத் தளங்கள்.

அதிலும் பெரும் கொடுமை எனது கட்டுரைகளைக் கூட மற்றவர் தளங்களில் அவர்களுடைய கட்டுரையைப் போல பதிப்பிக்கிறார்கள் என்பது சில வாரங்களுக்கு முன் ஆதாரங்களுடன் ஒரு நணபர் எனக்கு எழுதியது வேடிக்கையாக இருந்தது.  நான் அவர்களின் தளங்களை வலம் வந்துப் பார்த்தேன்,  எனக்கோ அல்லது வல்லினத்திற்கோ நன்றி கூட குறிப்பிடப்படவில்லை.

சீனாவும் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது, இந்த காப்புரிமை மீறல்களில் அதிலும் குறிப்பாக டிஜிட்டல் துறையில் ஆனால் மேலை நிறுவனங்கள் அங்கு சட்ட ரீதியாக அவைகளை அணுக சட்டமும் அரசாங்கமும் உடந்தையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் சட்டமும் அரசாங்கமுமே காப்புரிமை சார்ந்த அந்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

அதுவெல்லாம் இருக்கட்டும் சில மாதங்களாக எதுவும் எழுத முடியாத வண்ணம் வேலைகளில் சிக்கி இருக்கிறேன். இப்பொழுதெல்லாம் மாதம் குறைந்த 3 வாரங்கள் தமிழ் நாட்டில்தான் இருக்கிறேன். வல்லினத்திற்கு கூட எழுத முடியவில்லை. நண்பர் நவீன் என்னை மன்னிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அதிகம் எழுதுகிறேன் மீண்டும்.        

1 comment:

Sridhar said...

உண்மை தான். இங்கு குறிப்பாக இசை திருட்டு என்பது அறியாமையின் வழியே நடக்கிறது. திருடுபவர்களுக்கு திருடுகிறோம் என்ற குற்ற உணர்வோ அல்லது விழிப்புணர்வோ இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவின் காப்புரிமை சட்ட திட்ட நுணுக்கங்கள் குறித்து தங்களது அனுபவத்தை பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.