Monday, March 13, 2006

நானும் கடவுள்

நானும் கடவுள்

நாத்திகர் ஆகாதீர்கள்
என் இருப்பை
அலட்சியப்படுத்தி

அதற்காக
எனக்கு பூஜைகள் செய்யாதீர்கள்
கல்லாக சபிக்கப்படுவேன்
பிராத்தனைகளும் வேண்டாம்
காணிக்கைகள் கேட்பேன்
மதங்களும் வேண்டாம்
பிணங்கள் கோருவேன்

என்னை
நானாகவே இருக்கவிடுங்கள்
இதுவரை உங்களுக்கு
ப்ரீட்சையமான கடவுள்கள்
போலல்லாமல்

1 comment:

Nathimoolam said...

மிகவும் ரசனைக்குறிய, சிந்தனைக்குறிய கவிதை...

நதிமூலம்