Saturday, January 13, 2018

நான்

சக்தி சிவம்
சத்தியம்
காலம் வெளி
காட்சி நீ 
நான்


  • அகிலன் லெட்சமண்

Sunday, December 24, 2017

உண்மை

மழை வரும்
விரயமான நீரையெல்லாம்
திருப்பித் தரும்
ஒளி வரும்
உரமாகியதெல்லாம் உயிர்க்கும்
காலம் வரும்
கொடுத்ததெல்லாம் திரும்ப வரும்
மறந்ததெல்லாம் நினைவுபெறும்
மறைந்ததெல்லாம் உரு பெறும்
எதிலும் அழியா உண்மை
நானென உணர்ந்தப் பின்
எதுவும் நானாகி உய்க்கும்Wednesday, November 22, 2017

பிராத்தனை

குன்றாத செல்வம் தா
குறையில்லா ஞானம் தா
தோய்வில்லா உள்ளம் தா
நிலையான இன்பம் தா

Friday, September 29, 2017

நிஜம் தேடி

விளக்குகள் அணைத்த
இருள் அறையில்
மின்விசிறி காற்றில்
நேற்று சலவைக்குக் கொண்டுபோன
துணிகள் அடங்கிய
ப்ளாஸ்டிக் பை நுனி
5 நிமிடத்திற்கு இல்லை 3...1 நிமிடத்திற்கு
ஒரு முறை
அசைவதால் எழும் சின்ன ஓசை
பிரமாண்ட கற்பனை கதவுகளை
திறந்துவிட
அதிலிருந்து வெளிவரும்
ஏதோ ஒரு உருவம்
என்னையே வெறித்துப் பார்த்தப்படி
மூலையில் நின்றிருப்பதும்
போர்வைக்கு வெளியில் தென்படும்
கால்களை வருடுவதும்
வேறு பல விநோத ஓசைகளை எழுப்பி
நான் மட்டுமே தனித்திருக்கும்
இந்த இருள் உலகத்தில்
நான் அஞ்சும் உருவம் ஒன்று
என்னை நோக்கி வருவதும்
அந்த சமயத்தில்
பக்கத்து மசூதியின்
அசான் ஒலிக்க
பிரமாண்ட அச்சம் விழகி
எங்கும் மஞ்கலங்களும்
தேவர்கள் தேவதூதர்களும்
அருளும் ஆசீயும் சந்தோஷங்களும்
சூழ்ந்திருப்பாய் தோன்றும்
வாழ்வின் பல தருணங்களில்
நாம் உருவாக்கிய மாயைகளுக்குள்
உண்மைதேடியே
கழிகிறது வாழ்க்கை.


- அகிலன் லெட்சமண்

Sunday, September 3, 2017

நின்றுவிடாதே

எங்கும் நின்றுவிடாதே
யாருக்காகவும் எதற்காகவும்
தேங்கிவிடாதே

பாறைகள் அணைகள்
எதுவும் தடுக்கலாம்
செதுக்கிச் செல் அல்லது
தகர்த்து செல்

உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
கிளைகளிட வேண்டாம்
வாழ்ந்தவர்களுக்காக வாழ்பவர்களுக்காக
வாழப்போகிறவர்களுக்காக
தொடரட்டும் உன் பயணம்

நீ வெள்ளமாவதும்
ஊழியாவதும்
நதியாவதும்
உன் செயல்

இந்தப் பயணத்தில்
எந்த பாவமும் புண்ணியமும்
உன்னிடத்தில் தேங்காது
அது அவர்களின் வினை பயன்.

நீ நின்றுவிடாதே
வெள்ளமாய் பெருக்கெடு


Thursday, August 31, 2017

மனம்

நீண்ட நாட்கள்
பயன்படுத்தாத அறையில் மட்டும்
சிலந்திகள் வலை பிண்ணுகின்றன

சில இடங்களில்
நீர் பலநாட்களாகத் தேங்கியிருந்தால்
பாசணம் வளர்கிறது

பெட்ரோல் கிணறுகளில் மட்டும் 
வாழும் பக்டீரியாக்கள்
அசாதரணமான குழாய்களைக் கூட
அரித்துவிடுகின்றன 

எல்லா உயிர்களுக்கும்
வாழும் சூழல் 
சாதகமாகிவிட்டால்
அதை அவைகளின் 
உலகமாக்கிவிடுகின்றன

மனிதனுக்கு
இந்த அசெளகரொயங்கள்
இல்லை 

நம் உலகு,
மனை,
மனம்.


Sunday, August 20, 2017

வாழ்வு

எத்தனை அழகு
இயற்கை எங்கும் அற்புதங்கள்
கற்பனை கடத்தும் வானம்
கட்டுகள் அறுக்கும் வனம்
கண்கொண்டது கடப்பதற்கு

எத்தனைப் பாடல்கள்
எத்தனைப் பரவசங்கள்
புகழ்ச்சிகள்
ஆறுதல்கள் 
எச்சரிக்கைகள்
காதலிப்பதற்கே காதுகள்

நாவினால் சாத்தியப்படும்
அனைத்தும் ஆனந்தம்

புலன்களின் மோகம்
முடிவில்லா யாகம்
புலன்கள் கடந்தால் ஆன்மீகமல்ல
புலன்களில் ஆண்டவன்

வாழ்வு ரகசியங்கள்
அடுக்கிய படிகற்கள்

வாழ்வு வாழ்வதற்கே